districts

img

மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை விசைத்தறி பெண் தொழிலாளர்கள் புகார்

நாமக்கல், டிச.19- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை என விசைத்தறி பெண் தொழிலாளர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் திங்களன்று புகாரளித் தனர். நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சுமன் தலைமையில்  நடைபெற்றது. அப்போது குமாரபாளையம் வட்டம், ஓலப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கலைஞர் மக ளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப் பித்தபோதும் தங்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1,000 இதுவரை வழங்கப் படவில்லை. அதற்கான பதிலும் அளிக்கப் படவில்லை. உடனடியாக விடுபட்டோருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொ டர்ந்து மல்லசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த  பொதுமக்கள் அளித்த மனுவில், மல்ல சமுத்திரம் ஒன்றியம், சப்பையாபுரம் கிராமத் தில் செல்லியம்மன் மகளிர் சுய உதவிக் குழு செயல்படுகிறது. இதில், 11 பேர் உறுப் பினர்களாக உள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டில் ரூ.10 லட்சம் வங்கியில் குழு பெய ரில் கடன் பெறப்பட்டது. அதற்கான அசல் மற்றும் வட்டியை வங்கியில் செலுத்துமாறு குழுவில் உள்ள மூவரிடம் வழங்கிய நிலை யில், அவர்கள் அதனை வங்கியில் செலுத்தா மல் ரூ. 6 லட்சம் வரை மோசடி செய்துள்ள னர். எனவே, மாவட்ட ஆட்சியர் உரிய விசா ரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத் தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக போட்டி நடைபெறவில்லை. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை, 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்த அனு மதிக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த  பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் ஆட்சி யர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.