இளம்பெண் மரணம்: போலீசார் விசாரணை
ஈரோடு, நவ. 4- கோபி அருகே உள்ள பனியன் கம்பெனியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் தொழிலாளி மரண மடைந்தார். தேனி மாவட்டம், கருப்புசாமி கோவில் தெரு உப்பார்பட் டியைச் சேர்ந்தவர் மதுரைவீரன் மகள் அர்ச்சனா தேவி(20). இவர் ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே எம்மாம் பூண்டியில் உள்ள ஸ்ரீ பாரதி டெக்ஸ் என்ற பணியன் நிறுவ னத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 1 மாதமாக வேலை செய்து வந்த அர்ச்சனா கடந்த புதனன்று இரவு தந்தைக்கு தொலைபேசி மூலம் அழைத்து ஊருக்கு வருவதாக சொன்ன தாக கூறப்படுகிறது. ஆனால் வியாழனன்று காலை 11 மணிய ளவில் ஸ்ரீ பாரதி டெக்ஸ் உரிமையாளர் தனசேகரன், மதுரை வீரனைத் தொடர்பு கொண்டு, அர்ச்சனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மதுரைவீரன், ஈரோடு மாவட்டம் நம்பியூர் காவல் நிலையத்தில், தன் மகளின் மரணத்திற்கு கார்த்திகேயன் என்ற இளைஞனும், ஸ்ரீ பாரதி டெக்ஸ் கம்பெனி யும் தான் காரணம் என புகார் அளித்தார். புகாரை பெற்ற காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏர் ஹாரன்கள் அகற்றம்
கோபி, நவ.4- கோபி பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்து அலுவலகர்கள் பத்து பேருந்துகளில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் வட்டாரா போக்குவரத்து அலுவலர் வெங்கட்ரமணி, மோட்டார் வாகன ஆய்வாளர் பாமா பிரியா ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, தாளாவாடி செல்லும் பேருந்து களில் ஆய்வு மேற்கொண்டபோது 10க்கும் மேற்பட்ட பேருந் துகளில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஏர் ஹாரன் இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, பேருந்துகளில் இருந்த ஹாரன்களை அகற்றி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், ரூ.1000 வீதம் 10 பேருந்துகளுக்கு ரூ. 10 ஆயிரம் என அபராதம் விதித்தனர். மேலும், பொதுமக்களுக்கு அச்சு றுத்தல் ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற ஏர் ஹாரன் களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வும் எச்சரித்தனர்.
பள்ளி மாணவனை தாக்கிய எஸ்.ஐ., காவல் ஆணையரிடம் பெற்றோர் புகார்
திருப்பூர், நவ.4– திருப்பூர், நஞ்சப்பா அரசு மேல்நி லைப்பள்ளியில் படித்து வரும் தங்கள் மகனை பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் அடைத்து வைத்து உதவி ஆய்வாளர் ரஜினிகாந்த் என்பவர் கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியதாக மாணவரின் பெற்றோர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர். திருப்பூர் கலைஞர் பேருந்து நிலை யத்தில் நஞ்சப்பா அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கே.எஸ்.சி. அரசு மேல் நிலைப் பள்ளி மாணவர்களிடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த புதனன்று இப் பேருந்து நிலையத்தில் மாணவர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கடு மையாகத் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு சென்ற திருப்பூர் தெற்கு போலீசார் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை பிடித்து கடுமையாக எச்சரித்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை வரவழைத்து அவர்களிடம் நிலமையை எடுத்துரைத்து அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நஞ்சப்பா பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவனை தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வா ளர் ரஜினிகாந்த் புறக்காவல் நிலை யத்திற்குள் இழுத்துச் சென்று கடுமை யாகத் தாக்கி கைவிரலை உடைத்து விட்டதாக அம்மாணவனின் பெற்நோர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். கடந்த புதனன்று பேருந்து நிலை யத்தில் இருந்து அணைப்பாளையத்தில் உள்ள தமது வீட்டுக்கு வருவதற்காக மாணவர் சென்றிருக்கிறார். அப்போது காவல் உதவி ஆய்வாளர் கே.ரஜினி காந்த் தனது மகனை எவ்வித முன் விசாரணையும் இல்லாமல் புறக்காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்று கதவுகளை அடைத்துவிட்டு மனிதா பிமானம் இல்லாமல், பள்ளி சீருடையில் இருந்த மாணவர் என்றும் பார்க்காமல் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார். வயிற் றில் எட்டி உதைத்து, காதில் தொடர்ச்சி யாக அறைந்துள்ளார். மேலும் இடதுகை மோதிர விரலை உடைத் துள்ளார். இதுதொடர்பாக மாணவரின் தாயார் காவல் நிலையத்திற்குச் சென்று ஏன் அடித்தீர்கள் என்று கேள்வி எழுப்பியபோது, முறையாக பதில் அளிக்காமல், இப்போதே மாணவனை அழைத்துச் செல்லுங்கள், இல்லாவிட்டால் அவன் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். எனவே, இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் மேற்படி உதவி ஆய்வாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது டன், பாதிக்கப்பட்ட மகன் மற்றும் குடும்பத்தாருக்கு நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்பாடு
கோவை, நவ. 4- கோவை மாநகர் ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ஆகிய பகுதிகளில் பொது மக்கள் அவர்களது வாகனங்களை நிறுத்துவதற்கு மாநகர காவல்துறை சார்பில் குறைந்த கட்டணத்தில் வாகன நிறுத்தங்களை அறிவித்துள்ளது. இது குறித்து கோவை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகரில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு, பொது மக்கள் புதிய ஆடைகள் மற்றும் இதர பொருட்களை வாங்கும் பொருட்டு கோவை ஒப்ப ணக்கார வீதி, பெரிய கடைவீதி மற்றும் காந்திபுரம் கிராஸ்கட் ரோடு ஆகிய பகுதிகளில் அதிகளவில் வாகனங்க ளில் வருகின்றனர். இவ்வாறு வரும் போது ஏற்படும் போக்குவரத்து நெரி சலை தவிர்க்கும் பொருட்டு, பொது மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், பாலக்காடு ரோடு பொள்ளாச்சி சாலைகளிலிருந்து ஒப்பணக்கார வீதி மற்றும் டவுன்ஹால் பகுதியில் உள்ள கடைகளுக்கு செல் வோரின் வாகனங்களும் மற்றும் திருச்சி சாலை, ஒப்பணக்கார வீதி செல்லும் வாகனங்கள் சுங்கம் வாலாங்குளம் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் சென்று, உக்கடம் காவல் நிலையத் திற்கு எதிரில் புதிதாக கட்டப்பட் டுள்ள மேம்பாலத்திற்கு கீழ் உள்ள காலி இடத்தில் வாகனங்கள் நிறுத்து மிடத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு ஒப்பணக்கார வீதி மற்றும் டவுன்ஹால் பகுதிகளுக்கு நடந்து செல்ல வேண்டும். பேரூர் சாலை, மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து ஒப்பணக்கார வீதி மற்றும் டவுன்ஹால் பகுதியில் உள்ள கடைகளுக்கு செல்வோரின் வாகனங் கள் ராஜவீதி மற்றும் பெரிய கடைவீதி சந்திப்பு அருகில் உள்ள மாநகராட்சி வாகனம் நிறுத்தும் இடத்தில் கட்டணம் செலுத்தி தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, செல்ல வேண்டும். மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை, திருச்சி சாலைகளிலிருந்து கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலை யில் உள்ள கடைகளுக்கு செல்வோரின் வாகனங்கள் வடகோவை மேம்பாலம் கிராஸ்கட் ரோடு அருகில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளா கம் மற்றும் கோவை மத்திய சிறைச் சாலை மைதானத்தில் உள்ள வாகனங் கள் நிறுத்துமிடத்தில் தங்கள் வாகனங் களை நிறுத்திவிட்டு கிராஸ்கட் சாலைக்கு நடந்து செல்ல வேண்டும். இந்த மேற்கண்ட வாகன நிறுத்தங்கள் மற்றும் தனியார் வாகன நிறுத்த இடங்களில் தங்கள் வாகனங்களை நிறுத்தாமல், பொது இடங்களில் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்ப டும் வகையில் வாகனங்களை நிறுத்தி னால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள் ளது.
தாட்கோ மூலம் மானியம்
கோவை, நவ. 4- கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கை யில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பொரு ளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தொழில் முனைவேரின் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு சிமெண்ட் கழ கத்தின் விற்பனை முகவர், ஆவின்பாலகம் அமைத்தல் மற்றும் விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்க ளுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய வங்கிக்க டன் வழங்கப்படுகிறது. 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்கு டியினர் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராகவும் அத்துடன் கூடுதலாக இதர கட்டுமான பொருட்கள் மூலம் விற்பனை செய்து வரு வாய் ஈட்டும் வகையில் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத்தொ கையில் 30% அல்லது அதிகப்பட்சம் ரூ 2.25 லட்சம் மானி யமும், பழங்குடியினருக்கு திட்டத் தொகையில் 50% அல்லது ரூ.3.75 லட்சம் மானியமும் விடுவிக்கப்படும். 200 நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலா ளர்களுக்கு சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடை யும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்கும் நிலத்தின் விலையில் 50% அல்லது அதிகப்பட்சம் ரூ.5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படும். ஆதிதி ராவிடர் மற்றும் பழங்குடியின பொருளதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தாட்கோ இணையதள முகவரியில் www.tahdco.com விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவல கத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்கலன் வாகனங்கள் வழங்கும் விழா
நாமக்கல், நவ. 4- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சியில் 15-வது நிதிகுழு திட்டத்தின் கிழ் தூய்மைப் பணியாளர்களுக்கு மின்கலன் மூலம் இயங்கும் வாகனம் வழங்க முடி வெடுக்கப்பட்டது. அதன்படி, சனியன்று ரூ.24 லட்சம் மதிப் பீட்டில் 12 மின்கலம் மூலம் இயங்கும் வாகனங்கள், மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் விழா பள்ளிபாளையம் திருமண மண்டப வளாகப் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம். மதுரா செந்தில் தலைமை வகித்தார். நகர செயலாளர் அ.குமார், பள்ளிபாளையம் சேர்மன் மோ.செல்வராஜ், நகர் மன்ற தலைவர் பாலமுருகன் மற்றும் தூய்மைப் பணியா ளர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு நீதிமன்றம்
கோவை, நவ.4- கோவையில் பட்டியலினம் மற்றும் பழங்குடியின மக்க ளுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் சனியன்று திறக்கக்கப்பட்டது. கோவை, பந்தய சாலை பகுதியில் உள்ள மண்டல நீதிபதி கள் பயிற்சி மையத்தில் நடைபெற்ற துவக்க விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சத்தி குமார், முரளி கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர் களாக கலந்து கொண்டனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் காணொளி மூலம் இந்நிகழ்வில் பங்கேற் றார். மேலும், இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ் ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகராட்சி ஆணையர் மற்றும் பார்கவுன்சில் வழக்கறிஞர் கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பட்டியலினம் மற் றும் பழங்குடியின மக்களுக்கான வழக்குகளை விரைந்து விசாரிக்கும் சிறப்பு நிதிமன்றம் திறக்கப்பட்டது.
கைதிகள் தாக்கப்பட்ட விவகாரம் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பேட்டி
கோவை, நவ.4- கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கும், வார்டன் களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, சிறைச் சாலை கைதிகளை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் புகழேந்தி நேரில் சந்தித்து பேசினார். கோவை மத்திய சிறையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கைதிகளுக்கும் வார்டன்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கைதிகள் தாக்கப்பட்டது தொடர்பாக வழக் கறிஞர் புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். வழக்கு தொடர்பாக சனியன்று கோவை மத்திய சிறையில் கைதிகளை சந்தித்த வழக்கறிஞர் புகழேந்தி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி கோவை மத்திய சிறையில் உள்ள விசாரணை கைதிகள் 7 பேரை சிறைக் காவலர்களால் அடித்து துன்புறுத்தி தனிமை சிறையில் அடைத்துள்ளனர். இதுதொடர்பாக உயர் நீதிமன்றத் தில் ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கைதிகள் 7 பேரை யார் யார் தாக்கினார்கள்? எந்த ஆயுதத்தால் தாக்கினார்கள்? என்பது தொடர்பாக சிறைவளாகத்தில் பாதிக்கபட்ட கைதி களிடம் கேட்டறிந்துள்ளேன். மேலும், இச்சம்பவத்தை கண் டித்து மனித உரிமை ஆர்வலர்கள் வருகிற வியாழனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்த வுள்ளதாகவும் தெரிவித்தார்.
சாலைகளின் தரம் குறித்து ஆய்வு
கோபி, நவ.4- கோபி கோட்ட நெடுஞ்சாலைகளில் சாலைகளின் தரம் குறித்து நெடுஞ்சாலைதுறை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாவட்டம், கோபி கோட்டத்தில் சத்தியமங்கலம், புளியம்பட்டி, நம்பியூர், பெரியபுலியூர், கெட்டிசெவியூர், வாணிப்புதூர், குண்டேரிப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டதில் சாலைகளின் தரம், சாலைகளின் நீளம், அகலம், மற்றும் சாலை பாதுகாப்பு தடுப்புகள், எச்சரிக்கை சின்னங்கள் குறித்து நெடுஞ்சாலைத் துறை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் கோதண்டராமன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது கோவை கண்கா ணிப்பு பொறியாளர் ரமேஷ், கோபி கோட்டப் பொறியாளர் ஜெயலட்சுமி, உதவி கோட்டப் பொறியாளர்கள் அருட்செல் வம், விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
தீபாவளி பண்டிகை: இரவு முழுவதும் கடைகள் செயல்பட அனுமதி
கோவை, நவ.4- தீபாவளியை முன்னிட்டு, கோவை மாநகர கடைவீதி களில் கூட்டம் அலைமோதி வருகிற நிலையில், குற்றங்களை தடுக்க அதிக அளவில் காவலர்களை பணியமர்த்த திட்ட மிடப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ் ணன் தெரிவித்துள்ளார். கோவை மாநகர காவலர்கள் மற்றும் அவர்களது குடும் பத்தினருக்காக ஆயுர்வேத மருந்து குறித்த விழிப்புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் கோவை ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. இம்முகாமை துவக்கி வைத்த மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், பின்னர் செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தீபாவளியை முன்னிட்டு கிராஸ்கட் சாலை, ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக் காவலர்களும், சட் டம் ஒழுங்கு காவலர்களும் அதிக அளவில் பணியமர்த்தப் பட இருக்கிறார்கள். பிட்பாக்கெட் போன்ற குற்றங்கள் நடப் பதை தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. மேலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்க ளின் சிரமத்தை குறைக்கும் வகையில் தீபாவளி விற்ப னைக்காக இரவில் எத்தனை மணி நேரம் வேண்டுமானா லும் கடைகளை திறந்து வைக்க கடை உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநகரில் குற்றங்களை தடுப் பதற்கு ஓப்பனக்கார வீதியை சுற்றிலும் அதிநவீன கண்கா ணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தீபாவளியன்று, கோவை மாநகரில் உள்ள 3 ஆயிரம் காவலர்களும் பணியில் இருப்பார்கள் எனவும், கடைத் தெருக்கள் இருக்கக்கூடிய காவல் நிலையங்களில் குற் றத்தை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்படும், என்றார்.
அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த முன்னாள் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் கை
நாமக்கல், நவ.4- அரசு அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டிய தாக முன்னாள் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் கைது செய் யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள, வெப் படை பகுதியினை சேர்ந்தவர் பாலசுப்ரமணி என்கிற வெப் படை பாலு. இவர் முன்னாள் ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக இருந்தவர். மேலும் கடந்த காலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் மாவட்ட விவசாய அணி செயலாளராக வும் பதவி வகித்தார். தற்போது, பாஜக ஆதரவாளராக செயல் பட்டு வருகிறார். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் பூங் குழலி கொடி நாள் நிதி கேட்டு பணம் பறிப்பதாக வதந்தி களை பரப்பி வந்துள்ளார். மேலும், அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்ட போது, வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று வட்டார போக்குவரத்து அலுவலரை மிரட்டி நன்கொடையாக பணம் கேட்டதாகவும் தெரிகிறது. அதுமட்டுமின்றி, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த வட்டார போக்குவரத்து அலு வலரை ஒருமையில் பேசி பணி செய்யவிடாமல் தடுத்ததாக வும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து, வட்டார போக்கு வரத்து அலுவலர் பூங்குழலி, வெப்படை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார், வெப்படை பாலுவை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
மின்னல் தாக்கியதில் 7 ஆடுகள் பலி
அவிநாசி, நவ.4- அவிநாசி அருகே தண்டுக்காரன்பாளை யம் ஊராட்சி தாளக்கரை பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன் (80) விவசாயி. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வரு கிறார். இந்நிலையில் சேவூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கடந்த 3 நாள்களாக இடி, மின்னலுடன் பெய்தது. இதில், மின்னலு டன் பெய்த மழையால், கருப்பண்ணன் தோட்டத்து சாலையில் கட்டியிருந்த 7 ஆடு கள் உயிரிழந்தன. தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் மயில்சாமி, வருவாய்த்துறையினர், கால் நடை மருத்துவர் கணேசமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். இதையடுத்து உயிரிழந்த 7 ஆடுகள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அப்பகுதியி லேயே அடக்கம் செய்யப்பட்டது. இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் மயில்சாமி கூறுகையில், விவசாயி கருப்பண் ணன் கால்நடைகளை வளர்ப்பையே பிரதான மாக கொண்டுள்ள நிலையில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடுகள் உயிரிழந்ததுள் ளது. இதற்கு வருவாய்த்துறையினர் மூலம் உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத் துள்ளோம், என்றார்.