districts

img

கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழா

ஈரோடு, ஆக.27- கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் ஈரோடு மூலப்பாளையத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங் கத்தின் மூலப்பாளையம் கிளையின் சார்பில் கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டன. கிளைத் தலைவர் க.ரமேஷ் தலைமை வகித்தார். செயலாளர் ச.ந.விக்னேஷ் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் எழுத்தாளர் மயிலைபாலு “தமிழனே நான் உனக்கு  சொந்தக்காரன்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.  தொடர்ந்து ஈரோடு நாடகக் கொட்டகையின் சதீஷ்குமார் இயக்கத்தில் “நாற்காலிக்காரர்” நிஜநாடகம் இடம் பெற்றது.  மேலும் வா.ஆன்ட்ரூ இயக்கத்தில் ஜோல்னா பை குறும் படம் திரையிடப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்தனர். இறுதியாக, பழனிசாமி நன்றி  கூறினார்.