districts

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் - மேற்கு மாவட்டங்கள் சாதனை

திருப்பூர், மே 6 – பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் திருப்பூர் மாவட்டத்தில் 97.45 சதவிகி தம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற் றுள்ளனர். இதன் மூலம் மாநிலத்தி லேயே திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத் தில் ஈரோடு மாவட்டமும், சிவகங்கை  மாவட்டமும் பகிர்ந்து கொண்டது, நான் காவது இடத்தில் கோவை மாவட்டம் என முதல் ஐந்து இடங்களில் மேற்கு மாவட்டங்கள் சாதனை புரிந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர் வில் 23 ஆயிரத்து 849 மாணவ, மாணவி யர் எழுதினர்.  இதில் 23 ஆயிரத்து 242  பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த  ஆண்டு மாநில அளவில் 2-ஆம் இடம்  பிடித்திருந்த திருப்பூர் மாவட்டம், தற் போது, 97.45 சதவிகிதம் மாணவ, மாண விகள் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்து  சாதனை படைத்தது. மாணவர்கள் தேர்ச்சி 96.58 சதவீதம். மாணவிகள் 98.18  சதவீதம் ஆகும். சாரசரி 97.45 சதவீ தம். அரசுப் பள்ளிகளில் 7956 மாணவ, மாணவியர் தேர்வு எழுதியதில் 7631 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 95.92 சத வீதம் தேர்சசி பெற்று மாநில அளவில்  அரசுப் பள்ளிகளுக்கான இடத்தில் முத லிடம் பிடித்து சாதனை படைத்தது. நக ராட்சி பள்ளிகளில் 2395 பேர் தேர்வு  எழுதியதில், 2276 பேர் தேர்ச்சி பெற்ற னர். இது 95.03 சதவீதம் ஆகும். அரசு உதவி பெறும் 18 பள்ளிகளில் 3168 மாணவ, மாணவியரில் 3048 பேர் தேர்ச்சி  பெற்று 96.21 சதவீதம் பெற்றுள்ளது. சுயநிதிப் பள்ளிகளில் 777 பேரில், 772 பேர் தேர்ச்சி பெற்று. தேர்ச்சி சதவீதம் 99.36 கிடைத்துள்ளது. 109 மெட்ரிக் பள் ளிகளைச் சேர்ந்த 9 ஆயிரத்து 553 பேர்  தேர்வு எழுதியதில், 9 ஆயிரத்து 515 பேர்  தேர்ச்சி பெற்றனர். இது 99.60 சதவீ தம் ஆகும். மொத்தமாக 213 பள்ளி களை சேர்ந்த 23 ஆயிரத்து 849 பேரில், 23 ஆயிரத்து 242 பேர் தேர்ச்சி பெற் றுள்ளனர்.  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் கூறும்போது,  மாணவர் கள், ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட நிர்வாகம் அனைவரின் முயற்சியால் மாநில அள வில் முதலிடம் கிடைத்துள்ளது. மாண வர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடின  உழைப்பால்தான், மாநில அளவில் முத லிடம் பிடித்து சாதித்துள்ளோம். பள்ளி யில் தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்து சிறப்பு முயற்சிகள் எடுக்கப் பட்டு, இனிவரும் காலங்களில் கூடுதல்  கவனம் செலுத்தப்படும் என்று கூறி னார்.

ஈரோடு

இதேபோன்று, ஈரோடு மாவட்டத் தில் 9 ஆயிரத்து 864 மாணவர்கள், 11  ஆயிரத்து 362 மாணவிகள் என 21 ஆயி ரத்து 226 பேர் தேர்வு எழுதி உள்ளனர்.  அதில் 9 ஆயிரத்து 540 மாணவர்கள் மற் றும் 11 ஆயிரத்து 138 மாணவிகள் என  20 ஆயிரத்து 678 பேர் தேர்ச்சியடைந்துள் ளனர். இதில் அரசு பள்ளியில் பயின்ற  மாணவர்கள் 4 ஆயிரத்து 64 பேர், மாண விகள் 5 ஆயிரத்து 906 பேர் என மாண வர்கள் தேர்ச்சி விகிதம் 96.72, மாணவி கள் தேர்ச்சி விகிதம் 98.03 ஆகும். மொத் தம் 97.42 விழுக்காடு தேர்ச்சியடைந்து மாநில அளவில் இரண்டாமிடத்தை அடைந்து சிவகங்கை மாவட்டத்துடன் இரண்டாமிடத்தைப் பகிர்ந்து கொண் டுள்ளது.

கோவை

கோவை மாவட்டத்தில் பன்னிரெண் டாம் வகுப்பு தேர்வை 33 ஆயிரத்து 399  பேர் எழுதியுள்ளனர். அதில் மாணவர் கள் 15,107 பேரும், மாணவிகள் 18,292  பேரும் இத்தேர்வை எழுதியுள்ளனர். தேர்வு எழுதியதில் 32,387 பேர் தேர்ச்சி  பெற்றுள்ளனர். அதில் மாணவர்கள்  14,459 பேரும், மாணவிகள் 17,928 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக் கம் போல மாணவர்களை விட மாணவி கள் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ள னர். மாணவர்களின் தேர்ச்சி எண் ணிக்கை 95.71 சதவீதமாகவும், மாணவி கள் தேர்ச்சி எண்ணிக்கை 98.01  சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.  கோவை மாவட்டத்தில் 118 அரசுப்  பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 770  மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுதினர்.  அதில் 10 ஆயிரத்து 53  மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள் ளனர். இதிலும் மாணவர்களை காட்டி லும், மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி  பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி  விகிதம் 89.43 சதவீதமாகவும், மாணவிக ளின் தேர்ச்சி விகிதம் 95.76 சதவீதமா கவும், அரசுப்பள்ளிகளின் மொத்த தேர்ச்சி விகிதம் 93.34 சதவீதமாகவும் உள்ளது. கடந்த ஆண்டும் கோவை  நான்காம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக் கது. 

சேலம்

சேலம் மாவட்டத்தில் பன்னிரெண் டாம் வகுப்புத்தேர்வு 34,908 பேர் தேர்வு  எழுதி இருந்தனர். இந்நிலையில், மாண வர்கள் 14,824 பேரும், மாணவிகள் 18,198 பேரும் என மொத்தம் 33,022  பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்க ளின் தேர்ச்சி விகிதம் 92.35 சதவீதமும்,  மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 96.51 சதவீதமாகவும் உள்ளது. சேலம் மாவட்டத்தில் 159 அரசுப்  பள்ளிகளைச் சேர்ந்த 18,832 பேர் தேர்வு  எழுதி இருந்தனர். அதில் மாணவர்கள் 6,893 பேரும், மாணவிகள் 10,427 பேர்  என மொத்தம் 17,320 தேர்ச்சி பெற்றுள் ளனர். அரசு பள்ளி மாணவ, மாணவர்க ளின் தேர்ச்சி விகிதம் 91.97 சதவீதமாக உள்ளது. சேலம் மத்திய சிறையில் பன்னிரண் டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 11  ஆண் சிறைவாசிகள் மற்றும் ஒரு பெண்  சிறைவாசி என மொத்தம் 12 சிறை கைதி கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களுக்கு சேலம் மத்திய சிறை  காவல் கண்காணிப்பாளர் வினோத்கு மார் பரிசுப் பொருட்கள் வழங்கி பாராட் டினர். உதகை நீலகிரி மாவட்டத்தில், கடந்த 2023 ஆம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் 12  ஆவது பொதுத் தேர்வில் 93.86 சதவீதம்  பெற்று 29 ஆவது இடத்தில் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு 94.27 சத வீதம் பெற்று 25 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. குஞ்சப்பனை, ஏகலைவா உண்டு உறைவிட பள்ளி ஆகிய இரண்டு பழங் குடியின பள்ளிகள் மற்றும் கக்குச்சி, அதிகரட்டி, தாவெணெ, ஈளாடா, குன் னூர் அறிஞர் அண்ணா, குன்னூர் மாதிரி  பள்ளி ஆகிய 6 அரசு பள்ளிகள் உள் ளிட்ட 8 பள்ளிகள் 12 வகுப்பு பொது தேர் வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதேபோல் 3 அரசு உதவி பெறும் பள் ளிகள் 12 தனியார் பள்ளிகள் என மொத் தம் 23 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற் றுள்ளன. 

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் பிளஸ்டூ பொதுத்தேர்வில் 93.55சதவீதம் தேர்சசி  பெற்றுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் பிளஸ்டூ பொதுத்தேர்வில் இந்த ஆண்டு 8904  மாணவர்கள் 9512மாணவிகள் என மொத்தம் 18416 பேர் தேர்வு எழுதினர். இதில் 8161 மாணவர்களும் 9067 மாண விகள் என மொத்தம் 17228 பேர் தேர்ச்சி யடைந்துள்ளனர். இதில் 91.66 சதவீதம்   மாணர்கள் தேர்ச்சியும், 95.32 சதவீதம் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் குறிப்பாக ,அரசுப்பள்ளி 91.25 சதவீத தேரச்சியும்,சமூக நலத்துறை  சேர்ந்த பள்ளி 100 சதவீத தேர்ச்சியும், பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி 96.30 சதவீததேர்ச்சி பெற்றுள்ள னர்.மாவட்டத்தில் 4, அரசுப்பள்ளிகள் 100  சதவீத தேரச்சியும் 1,பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. நாமக்கல் பொதுத் தேர்வில் நாமக்கல் மாவட் டத்தில் 96.10% மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட ஆட் சியர் தகவல். நாமக்கல் மாவட்டத்தில் மார்ச் 2024 –ல் நடைபெற்ற மேல்நிலை இரண் டாம் ஆண்டு பொதுத் தேர்வில் 197  பள்ளிகளை சார்ந்த 8,413 மாணவர்க ளும் 8,847 மாணவிகளும் என மொத்தம் 17,260 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 7,989 மாணவர்களும் 8,597 மாணவிகளும் என  மொத்தம் 16,586  பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்க ளின்  தேர்ச்சி 94.96 சதவிகிதமும், மாண விகளின் தேர்ச்சி 97.17 சதவிகிதம் என  மொத்தம் 96.10 சதவிகிதம் தேர்ச்சி பெற் றுள்ளனர்.

திருப்பூரில் 112 பள்ளிகள் நூறு சதவிகிதம் தேர்ச்சி

திருப்பூரில் 112 பள்ளிகள் நூறு சதவிகிதம் தேர்ச்சி திருப்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, சுய நிதி  மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 112 பள்ளிகள் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள் ளன. இதில் 16 பள்ளிகள் அரசுப் பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் திருப்பூர் மாவட்டத்தில் 16 அரசுப் பள்ளிகள்,  1 நகராட்சி பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள் 2, சுயநிதி பள்ளிகள் 9 மற்றும்  மெட்ரிக் பள்ளிகள் 84 என மொத்தம் 112 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி  பெற்றுள்ளன. தளவாய்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி, உத்தமபாளையம் அரசு  மேல்நிலைப்பள்ளி, அலங்கியம் அரசு மேல்நிலைப்பள்ளி, குண்டடம் அரசு  மேல்நிலைப்பள்ளி, கொளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, மூல னூர் மாதிரி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, புதுப்பை அரசு மேல்நி லைப்பள்ளி, வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, கொடுவாய் அரசு மேல்நி லைப்பள்ளி, குன்னத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கானூர்பு தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, சரவணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, சூரி யப்பம்பாளையம் எஸ்.முருகப்பா அரசு மேல்நிலைப்பள்ளி, ஜல்லி பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, தேவனூர்புதூர் என்ஜிபி அரசு பெண்கள்  மேல்நிலைப்பள்ளி, பெரிய வாளவாடி நாராயணசாமி அரசு மேல்நி லைப்பள்ளி, தாராபுரம் என்.சி.பி. நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,  திருப்பூர் கோவிந்தாபுரம் மாணிக்கசுவாமி நாயுடு அரசு மேல்நிலைப்பள்ளி  மற்றும் ஊதியூர் சாந்தி நிகேதன் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 19 பள்ளி கள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன.




 

;