குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் பேரூர் நகரக் குழு சார்பில், அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் உஷா, நகரச் செயலாளர் மலையரசி, வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் தினேஷ் ராஜா நகரச் செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.