districts

சாலையை சீரமைக்காததால் மறியல்

சேலம், மே 19- ஆத்தூர் அருகே குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்பட்ட சாலை சீரமைக்காததால், வியாபாரிகள் மற்றும் பொதுமக் கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஆத்தூரில் பிரதான ரயிலடி தெருவில் 60 அடி சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாகத்தான் ரயில் நிலையம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நக ராட்சி நடுநிலைப்பள்ளி, தனியார் மருத்துவமனைகள், பூங்கா  மற்றும் காந்தி நகர் குடியிருப்புகளுக்கு செல்ல வேண்டும். நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் இச்சாலையில் சென்று வருகின்றனர். இதனிடையே இச்சாலையில் புதிதாக குடிநீர் குழாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு பல மாதங் களாகியும் சாலையை சீரமைக்காகததால் அப்பகுதியில் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், தோண்டப்பட்ட பள்ளத்தால் சாலைப்பகுதி புகை மூட்டமாக காணப்படுவ தால் வியாபாரம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இந் நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆத்தூர் வட்டாட்சியர் மாணிக்கம், போராட்டக்காரர்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இதில், உடனடியாக சாலையை சீர மைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி யளித்தனர். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு அனை வரும் கலைந்து சென்றனர். அதேமசமயம் விரைவில் சாலையை சீரமைக்காவிட்டால், பெரிய அளவிலான போராட் டம் நடைபெறும் என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரி வித்தனர்.