அவிநாசி,நவ.29- அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சியை சேர்ந்த 11ஆவது வார்டு கவுன்சிலர் சாலை வசதி வேண்டி வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து கோரிக்கை மனு அளித் தார். தேவம்பாளையம் சாலை, இந்திரா காலனி முதல் பெரி யாயிபாளையம் மெயின் ரோடு காமராஜ் நகர் முதல் வீதி, இரண்டாவது வீதி வரை 340 மீட்டர் அளவு கொண்ட மெட்டல் தார் சாலை அமைக்க கோரியும், தேவன்பாளை யம் செல்லும் சாலை பாலமுருகன் கோவில் வீதியில் சாலை வசதி அமைத்து தர கோரியும், பெரியாயிபாளையத்தில் உள்ள இரண்டு பால்வாடி மையத்திற்கு 100 மீட்டர் சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டார வளர்ச்சி அலுவலரிடம், திராவிட முன் னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 11 ஆவது வார்டு ஒன்றிய கவுன் சிலர் சேது மாதவன் வழங்கியுள்ளார். இதனை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், கோரிக்கைகளை நிறை வேற்றி தருவதாக கூறியுள்ளார்.