districts

பெருந்துறை: 4 தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு

ஈரோடு, செப்.20- பெருந்துறை சிப்காட் வளாகத் தில் செயல்பட்டு வரும் 4 தொழிற் சாலைகளுக்கு மூடுதல் உத்தரவு வழங்கப்பட்டு, மின் இணைப்பு துண் டிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் பாலத் தொழுவு குளம் மாசடைவதாக புகார் கள் பெறப்பட்டது. இதனைத்தொ டர்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலகமானது பெருந்துறை சிப்காட்டில் அமைந் துள்ள அனைத்து தொழிற்சாலை களையும் திடீர் ஆய்வு செய்ய தலா மூன்று அதிகாரிகளை கொண்ட மூன்று சிறப்புக்குழுக்களை அமைத் தது. சிறப்புக்குழுக்கள் அதிரடி ஆய் வுகள் மேற்கொண்டு அறிக்கைகள் சமர்பித்தது. அதனடிப்படையில் தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சென்னை தலைமை அலுவலகம், பெருந்துறை சிப்காட் வளாகத்தி லுள்ள 3 சாய தொழிற்சாலைகளை மூட உத்தரவிட்டது. அதனைத்தொ டர்ந்து மூட உத்தரவிடப்பட்ட ஆலை களின் மின் இணைப்புகளை உடனடி யாக துண்டிக்கவும் உத்தரவிட்டது. இவ்வாறு சிப்காட் தொழில் வளாகத் தில் செயல்பட்டு வரும் 3 சாயத்தொழிற் சாலைகளின் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சிப்காட் வளாகத்தில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப் படையில் ஒரு ரசாயன தொழிற்சாலை, அதன் கழிவுநீரை தொழிற்சாலை  வளாகத்திற்கு வெளியே வெளியேற் றியது கண்டறியப்பட்டது. அதனடிப் படையில் மாவட்ட ஆட்சியர் தலை மையில் செயல்பட்டு வரும் மாவட்ட  ஒருங்கிணைப்புக்குழு மூலம் மின்  இணைப்பு துண்டிக்க மாவட்ட ஆட் சியரால் ஆணை வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்நிறுவனத் தின் மின் இணைப்பும் துண்டிக்கப் பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது. சிப்காட் வளாகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் தங் களின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யங்களையும் மற்றும் காற்று மாசு தடுப்பு சாதனங்களை முறையாக வும், தொடர்ச்சியாகவும் இயக்க வேண் டும். தவறிழைக்கும் தொழிற்சாலை கள் மீது சட்ட ரீதியான தக்க நடவ டிக்கைகள் மேற்கொள்ளும் பணி  தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.