சேலம், டிச.30- ஓமலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற, பெரி யாரின் இறுதி முழக்கம் மற்றும் 50 ஆம் ஆண்டு நினைவு தினப் பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்ட னர். சேலம் மாவட்டம், ஓமலூர் பேருந்து நிலையம் அருகே தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் மற்றும் 50 ஆம் ஆண்டு நினைவு தினப் பொதுக்கூட்டம் ஓமலூர் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. திராவிடர் கழக மேட்டூர் செயலாளர் கலை வாணன் வரவேற்றார். திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர் கானா பாலு, மாவட்டத் தலைவர் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக திராவிட கழகத் தலைமை கழக பேச்சாளர் அன்பழகன், புள்ளையண்ணன் ஆகியோர் திராவி டர் கழகக் கொள்கை கோட்பாடுகள் குறித்தும், ஒன்றிய பாஜக அரசு குறித்து விமர்சனம் செய்து உரையாற்றினர். இதில் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.