நாமக்கல், ஜன.16- தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மக்கள் ஒற் றுமை சமத்துவப் பொங்கல் விழா எழுச்சியோடு கொண்டாட்டப்பட் டது. தை முதல் நாள் தமிழர்களின் திருநாளாம் பொங்கல் விழா, பண்பாட்டு விழாவாகவும், இயற்கைக்கு நன்றியறிதலை தெரிவிக்கிற விழாவாக கொண் டாடப்படுகிறது. சாதி, மத வேறு பாடின்றி கொண்டாடி மகிழும், இந்த பொங்கல் திருநாளை தமிழ கம் முழுவதும் மக்கள் ஒற்றுமைக் ்கான திருவிழாவாகவும், பாசிச சக்திகளை விரட்டியடிப்போம் என்கிற உறுதியேற்பு விழாவாக வாலிபர் சங்கத்தின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக, நாமக் கல் மாவட்டம், பள்ளிபாளை யத்தில் வாலிபர் சங்கம் காவேரி ஆர்.எஸ் கிளை சார்பில் 26 ஆம் ஆண்டு பொங்கல் விளை யாட்டுப் போட்டிகள் நடைபெற் றது. மாவீரன் பகத்சிங் நினைவு திடலில் நடைபெற்ற விழாவுக்கு, கிளைத்தலைவர் பூபாலன் தலைமை வகித்தார். இந்த நிகழ் வில் கோலப்போட்டி, இசை நாற்காலி, தண்ணீர் குடம் எடுத் தல், சாக்குப்போட்டி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இறுதி யில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதேபோன்று, வசந்த நகர் மற்றும் ராஜாஜி நகர் கிளை சார்பில் 14 ஆம் ஆண்டு பொங் கல் விழா விளையாட்டுப் போட்டி கள் நடைபெற்றது. கிளைத் தலை வர் கேசவன் தலைமையில் நடை பெற்ற விழாவில், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் மணிகண் டன், மாவட்டத் தலைவர் லட்சு மணன், பள்ளிபாளையம் வாலி பர் சங்க ஒன்றியச் செயலாளர் நவீன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில், போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், வெடியரசம் பாளை யம் கிளைகள் சார்பில் சமத் துவ பொங்கல் விழா கொண்டா டப்பட்டது. இதில் தாலுகாச் செய லாளர் அருண்குமார் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரி
தருமபுரியில், சமூக நல்லி ணக்க மேடை சார்பில் தருமபுரி சமூக சேவை மையத்தில் சமத் துவ பொங்கல் விழா கொண்டா டப்பட்டது. இவ்விழாவில், மேடையின் இணை ஒருங்கி ணைப்பாளர் பொ.மு.நந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் அ.குமார், விடுதலை சிறுத்தை கள் கட்சியின் மாவட்டச் செய லாளர் த.கு.பாண்டியன், மனித நேய மக்கள் கட்சியின் மாவட் டத் தலைவர் என் .சுபேதார், மதி முக மாவட்டச் செயலாளர் ராம தாஸ், தருமபுரி சமூக சேவை மையத்தின் சார்பில் சரண்யா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சோலை. அருச்சுனன், ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஜெயா, சிறுபான்மை நலக்குழு அமைப் பின் மாவட்டச் செயலாளர் ஜேசு தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவை
கோவை மாவட்டம், வடசித் தூர் பெரியார் நினைவு சமத்து வபுரத்தில், இந்திய ஜனநா யக வாலிபர் சங்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா நடைபெற் றது. இதில், வாலிபர் சங்க பொள் ளாச்சி தாலுகாத் தலைவர் ரமேஷ் கண்ணன் தலைமை வகித்தார். விழாவில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகாச் செயலாளர் அன்பர சன், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். முன்னதாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனை வருக்குமான போட்டிகள் நடத் தப்பட்டு, வெற்றி பெற்றவர்க ளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஈரோடு ஈரோடு தாலுகா வாலிபர் சங்கம் ஊனாத்திபுதூர் கிளை சார்பில் 28 ஆம் ஆண்டு பொங் கல் விழாவும், சத்தியமங்கலம் வட்டம், தண்ணீர் பள்ளம் கிளை சார்பில் 29ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழாவும் நடை பெற்றது. இதில், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஏ.விஸ் வநாதன், முன்னாள் மாவட்டச் செயலாளர் என்.பாலசுப்பிர மணியம், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பா.லலிதா, சிபிஎம் தாலுகாச் செயலாளர் கே.எம்.விஜயகுமார் மற்றும் வாலிபர் சங்க தாலுகாத் தலைவர்கள், செயலாளர்கள், கிளை நிர்வாகி கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். அதே போன்று, ஈரோடு மாவட்டம் வெண்டிபாளையம், மூலப்பாளையம், பள்ளத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சமத் துவ பொங்கல் விழா நடைபெற் றது.