districts

img

சமாதானத்திட்டம் : விழிப்புணர்வுக் கூட்டம்

கோவை, நவ. 7- அரிசிக்கு மாறுபட்ட ஜிஎஸ்டி விதிக்க கூடாது என்ற வணி கர்களின் கோரிக்கை சம்மந்தமாக ஜிஎஸ்டி கவுன்சிலில் மீண்டும் எடுத்துரைப்போம் என வணிக வரித்துறை அமைச் சர் மூர்த்தி தெரிவித்தார். கோவை மாநகராட்சி கலையரங்கில் வணிகவரி நிலுவை களுக்கான சமாதானத்திட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும்  விளக்கக்கூட்டம்நடைபெற்றது. வணிகவரித்துறை அமைச் சர் பி.மூர்த்தி தலைமையில்நடைபெற்ற இந்நிகழ்வில்  கோவை, ஈரோடு, சேலம், ஓசூர் கோட்டங்களை சேர்ந்த வணி கர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும், அந்த மாவட்டங் களை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.  முன்னதாக கூட்டத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி, இந்த  திட்டத்தின் கீழ் வணிகர்களுக்கு 50 ஆயிரம் வரை வரி நிலுவை யில் இருக்கும் எனவும், 95 ஆயிரம் பேருக்கு தள்ளுபடி செய்து  1002 சொத்துகள் ஒப்படைக்க பட்டுள்ளது எனவும் தெரி வித்தார். அரிசிக்கு மாறுபட்ட  ஜிஎஸ்டி இருப்பதை சரி செய்ய வேண்டும் என வணிகர்கள் கேட்டு இருக்கின்றனர் எனக்  கூறிய அவர், அரிசிக்கான கோரிக்கையினை ஜிஎஸ்டி கவுன் சிலில் மீண்டும் வைப்போம் எனவும் தெரிவித்தார். மேலும்,  மாவட்ட வாரியாக வணிக வரித்துறை அதிகாரிகள், வணிகர் களை அழைத்து சமாதானத் திட்டம் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்த சொல்லி இருக்கின்றோம். இருக்கும் நிலுவை வரியை கட்டினால்தான் இன்னும் இரு ஆண்டு கள் வரை இந்த சலுகையை நீடிக்க முதல்வரிடம் கேட்க முடி யும் என்றார்.