ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் கோவை டாடாபாத் மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு புதனன்று நடைபெற்றது. இதில், மண்டலச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன், மாநகரத் தலைவர் பி. மதுசூதனன், வடக்கு கிளைச் செயலாளர் எம்.மணிகண்டன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.