districts

சிந்தனைகளை விலை கொடுத்து வாங்க முடியாது

திருப்பூர், ஜன.31 - நீங்கள் விலை கொடுத்து வாங் குவது புத்தகத்தின் அச்சுக்கூலி யையும், காகிதத்தையும் தான்.  அதில் இருக்கும் சிந்தனை கருத்து களை நீங்கள் ஒருபோதும் விலை கொடுத்து வாங்க முடியாது என்று திருப்பூர் புத்தகத் திருவிழாவில் பேராசிரியர் பர்வீன் சுல்தானா கூறினார்.  திருப்பூர் புத்தகத் திருவிழா வின் 4ஆவது நாள் இலக்கிய நிகழ் வில் பேராசிரியர் பர்வீன் சுல்தானா பேசுகையில், புத்தகங்கள் வீடுகள்  போன்றவை. சில வீடுகள் எளிதாகத்  திறக்கும். சில வீடுகள் உள்ளிருந்து தான் திறக்க முடியும். சில வீடுகள்  இளைப்பாறிச் செல்ல வாய்ப்ப ளிக்கும். அது போலத்தான் புத்த கங்களும் செயல்படுகின்றன. இன்று புத்தகங்கள் அதிகமாக விற்பனை ஆகின்றன. ஆனால் புத்தக வாசிப்பு குறைந்துள்ளது. புத்தகங்களை வாசித்து அனுபவப் படுங்கள். அதை மற்றவர்களுக்குக்  கடத்துங்கள். கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற ஒரு புத்தகம்  மகாத்மா காந்தியை உருவாக் கியது. பேரறிஞர் அண்ணா புத்தக  வாசிப்புக்காக தனது அறுவை சிகிச் சையைக் கூட தள்ளிப் போட்டார்.

புத்தகம் எந்த சொல்லையும் புரிந்து கொள்வதற்கான ஆற்ற லைத் தரும். புத்தகத்தில் எத்தனை  சத்தியம் இருக்கிறது, எத்தனை சத்தியம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள புத்தக வாசிப்பு உங்களுக்குப் பயிற்சி தரும். வாசிப்பின் அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பேராற்றல் உங்களுக்கு வர வேண்டும் என் றால் புத்தகம் வாசிக்க வேண்டும். தமிழனுக்குத் தமிழ்தான் வர லாறு, தமிழ் மொழிதான் வரலாறு, தமிழ் மொழி செம்மொழி! நாம் எத்தனை தமிழ்ப் புத்தகங்களை வாசித்திருக்கிறோம். முஸ்லிம் களுக்கு குரான். இந்துக்களுக்கு உபநிஷத்துகள், வேதங்கள், கிறிஸ்துவர்களுக்கு பைபிள். ஆனால் தமிழனுக்கு திருக்குறள் தான் வேதம். திருக்குறளின் உரை யாசிரியர்கள் விளக்கங்களைப் படிப்பதற்கு முன்பு அந்த குறளை  பத்து பதினைந்து முறை வாசித்துப்  பாருங்கள். உங்களுக்கு தெளிவு கிடைக்கும். 

சொற்களின் சூட்சுமத்தைத் தெரிந்து கொள்ளவும், சொற் களில் கவனம் கொள்வதற்கும் புத்தகங்கள் ஞானம் தருகின்றன. அறம் என்ற ஞானத்தை புத்தகம்  என்ற போதி மரம் தருகிறது. சிந்திப் பதை நிறுத்திக் கொள்தல் மரணம். ரகசியமான பொய் சொல்லும் இந்த வஞ்சக உலகத்தில் இருந்து நம்மை மீட்டெடுப்பதற்காகத் தான் புத்தகத் திருவிழா. உறவுகளை நெருக்கமாக்குவது வார்த்தைகள்தான், மனதை வெளுக்கக்கூடிய ஆற்றல் கவி தைகள், கட்டுரைகள், நாவல்கள், மொழிபெயர்ப்பு நாவல்களுக்கு உண்டு. நமக்கான வாழ்வியல் இலக்கணங்களை, இலக்கண நூல்கள் தருகின்றன. நாம் எதைத் தேடிக் கொண்டிருக்கிறோமோ அவை நம்மைத் தேடிக் கொண்டி ருக்கின்றன என்ற சொற்கள் அழ கானவை. சொத்துக்காக அப்பா,  அம்மாவை நேசிக்காதீர்கள். சொத்தை விட முக்கியமானவர்கள் அப்பா, அம்மா! போர் முனையில் நிற்கின்றபோதும், மனம் பொங் காத நிலை மெய்ஞானம் என்றார்  மகாகவி பாரதி. மொழி தெரியாத வர்கள்தான் வன்முறையாளர்கள்.  நீ துப்பியது நேற்று, நான் இன்னும் சுமந்து கொண்டிருக்க நான் ஒன்றும் முட்டாள் இல்லை.  இதுவும் கடந்து போகும். இந்த மெய்ஞானம், அறம் சார்ந்து ஞானம் சார்ந்து அடுத்தவர்களோடு ஒன்றிணைய வேண்டிய அன்பு சார்ந்து வாழ்வதுதான் நமக்கான வாழ்க்கையாக இருக்கிறது. அந்த  ஞானம் தரக்கூடிய புத்தகத் திரு விழா என்ற போதி மரத்தின் கீழ்  நாம் அமர்ந்திருக்கிறோம். இவ் வாறு பர்வீன் சுல்தானா கூறினார்.

;