ஈரோடு, மார்ச் 22- எலவமலை ஊராட்சி யில் வட்டக்கல்சேரியின் அடிப்படை தேவைகள் குறித்து கடந்த சில நாட் களுக்கு முன்பு தீக்கதிரில் செய்தி வெளியானது. இந் நிலையில் உலக தண்ணீர் தினத்தையொட்டி மாவட் டத்தின் அனைத்து ஊராட்சி களிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடை பெற்றது. இதில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி பங்கேற்றார். இந்நிகழ்வில் பங்கேற்று ஆட்சியர் பேசு கையில், ஊரகப் பகுதிகளில்மழை நீரினை சேமிப்பதினை முனைப்புடன்செயல்படுத்த வேண்டும். மரக்கன்றுகளை வளர்த்து சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும். சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்ய வேண்டும். தண்ணீரை வீணாக்க கூடாது. தேவைக்கு அதிகமாக பயன்படுத்தும் தண்ணீர் அடுத்தவருடையது என்று உணர வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிக் காமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
ஜல் ஜீவன்இயக்கத்தின் கீழ் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக் கும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கென ஒன்றிய மற்றும் மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வரு கிறது. அரசின் திட்டங்களை நல்ல முறையில் அறிந்து பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்று தெரிவித்தார். முன்னதாக, ஊராட்சி தலைவர் கூட்டப் பொருள் குறித்து விவரித்தார். பின்னர் அடுத்த இரண்டு ஆண்டு காலத்தில் மேற் கொள்வதற்கான பணிகள் குறித்த விபரங் களைத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட ஆட்சியர் இப்பணிகள் குறித்த விபரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். அதுகுறித்து தங்களின் கருத்துகளை தெரி விக்கலாம். அவை சேர்த்துக்கொள்ளப்படும் என்றார். தொடர்ந்து பொதுமக்கள், ஓய்வூதியம், சாக்கடை, கழிவறை உள்ளிட்ட தங்கள் குறை களை ஆட்சியரிடம் தெரிவித்து மனுக் களாகக் கொடுத்தனர். அதனைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார். வட்டக்கல்சேரி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை யில் மனு கொடுத்தனர். இக்கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பெருந் தலைவர் பிரகாஷ், வருவாய் கோட்டாட் சியர் சதீஷ்குமார் மற்றும் துறை அலுவ லர்கள், எலவமலை ஊராட்சி மன்றத் தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் பங் கேற்றனர். முடிவில், வட்டார வளர்ச்சி அலு வலர் தங்கவேல் நன்றி கூறினார்.