districts

img

இந்திய ‘ஜெர்சி’ அணிந்து விளையாட வேண்டும்..!

முதலமைச்சர் கோப்பைக் கான போட்டியில் கலந்து கொண்டு, 2 தங்கப்பதக்கங்கள் மற்றும் ரூ.2 லட்சம் பரிசுத் தொகையினை வென்ற கோவை யைச் சேர்ந்த ஏஞ்சல் சில்வியா, இந்திய ஜெர்சி அணிந்து விளை யாடி பதக்கங்களை வெல்ல வேண்டும் என்கிற தனது லட்சியத்தை வெளிப்படுத் தியுள்ளார்.  கோவையைச் சேர்ந்தவர்கள் மரியமுத்து ராஜா - ஸ்டெல்லா ஜோஸ்மின் தம்பதியினர். மாரி முத்து திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் கூலித்தொழிலாளி யாக பணிபுரிந்து வருகிறார். இவ ரது மூத்த மகள் ஏஞ்சல் சில்வியா, கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் மூன்றாமாண்டு பி.ஏ வரலாறு பயின்று வருகிறார். சிறு வயதில் இருந்து தடகளத்தில் ஆர் வம் கொண்டிருந்த ஏஞ்சல் சில் வியா நடைபெற்று முடிந்த முத லமைச்சர் கோப்பைக்கான 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட் டப்பந்தயத்தில் கலந்து கொண் டார். இதில் 100 மீட்டர் பிரி வில் 11.9 விநாடிகளிலும், 200 மீட்டர் பிரிவில் 20.4 விநாடிகளி லும் கடந்து முதலிடத்தை பிடித் தார். வெற்றி பெற்ற ஏஞ்சல் சில்வி யாவுக்கு 2 தங்கப்பதங்களும், 2  லட்சம் ரூபாய் ரொக்கமும் பரிசாக வழங்கப்பட்டன.

தொடர் முயற்சி யால் இந்த வெற்றியை எட்டியுள்ள தாகவும், நாட்டிற்காக அடுத்தடுத்த  போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைப்பேன் என்றும் நம் பிக்கையுன் தெரிவிக்கிறார் ஏஞ் சல் சில்வியா. இதுகுறித்து ஏஞ்சல் சில்வியா கூறுகையில், நான் 6 வயதில் இருந்து தடகளப்போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறேன். தினமும் காலை 5  முதல் 8 மணி வரையும், மாலை 5  மணி முதல் 8 மணி வரையும் தட களப் பயிற்சி பெற்று வருகிறேன். கடந்த 2017 - 18 ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பை போட்டி யில் கலந்து கொண்டேன். அப் போது நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன். அதனைத்தொடர்ந்து இந்தாண்டு தான் முதலமைச்சர் போட்டியில் கலந்து கொண்டேன். இதில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் முதலிடத்தை பிடித் துள்ளேன். தமிழக ‘ஜெர்சி’ அணிய வேண் டும் என்று ஆசைப்பட்டேன். அந்த வகையில் தற்போது தமிழக  ‘ஜெர்சி’ அணிந்து விளையாடியுள் ளேன். அடுத்தது இந்திய ‘ஜெர்சி’  அணிந்து விளையாட வேண்டும். பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு நாட்டிற்கு வெற்றிகளை குவிக்க வேண்டும் என்பதே எனது கனவாக உள்ளது. தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொண்டு, நிச்ச யம் இந்தியாவிற்கு பெருமை சேர்ப் பேன் இவ்வாறு ஏஞ்சல் சில்வியா கூறினார்.

-கே.எஸ்.எம்.