குளறுபடி பட்டாவை ரத்து செய்ய உத்தரவு
குளறுபடி பட்டாவை ரத்து செய்ய உத்தரவு நாமக்கல், பிப்.10- ராசிபுரத்தில் இலவச ‘இ.பட்டா’ வழங்குவதற்காக வீடு, வீடாக சென்று ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டபோது, பிற் படுத்தப்பட்டோர் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச பட்டா வில் குளறுபடி இருந்ததால் அதனை ரத்து செய்து உத்தர விட்டார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பிற்படுத்தப்பட்டோர் கால னியில் 158 நபர்களுக்கு அரசு சார்பாக இலவச வீட்டுமனை வழங்கப்பட்டன. தற்போது அரசின் இ.பட்டா வழங்க வேண்டும் என தொடர்ந்து அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்த நிலையில், மாவட்ட ஆட்சியர் ச.உமா சம்பவ இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப் பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மக்களின் வீடுகளுக் குள் சென்று ஆய்வு மேற்கொண்டார். பட்டா வழங்கப்பட்ட பெயரில் குடியிருப்பு வாசிகள் உள்ளனரா அல்லது வேறு ஏதேனும் நபர்கள் வசித்து வருகின்றனரா என்பது குறித்து, பட்டா மற்றும் ஆதார் கார்டு மூலம் சரி பார்த்தார். அப்போது, பல நபர்கள் தற்போது அரசின் நிலத்தினை வேறொரு நபர்க ளுக்கு விற்பனை செய்து விட்டும் மற்றும் ஒரே பெயரில் 2 பட்டாக்கள் உள்ளதும் தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரி யிடம் கேட்டறிந்து முறையாக விசாரணை செய்து, அதன் பிறகு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், இல்லை யெனில் ரத்து செய்ய வேண்டும், என்றார்.
அரசு பள்ளிகளில் ஆண்டு விழா
அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நாமக்கல், பிப்.10- பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் நடை பெற்றன. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கண்டிப்புதூர் நக ராட்சி தொடக்கப்பள்ளி, ஆவரங்காடு நகராட்சி தொடக்கப் பள்ளி, அக்ரஹாரம் நகராட்சி தொடக்கப்பள்ளி, கிருஷ்ண வேணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் நடைபெற்றன. இவ்விழாக்களில் திமுக நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலா ளர் எம்.மதுரா செந்தில், நகரச் செயலாளர் அ.குமார், நகர் மன்ற தலைவர் மோ.செல்வராஜ், துணைத்தலைவர் ப.பால முருகன் ஆகியோர் கலந்து கொண்டு, மாணவ, மாணவிக ளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். மேலும், மாவட்ட அளவில் நடைபெற்ற கலைப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிக்கு ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகைக் கான காசோலை வழங்கப்பட்டது. அப்போது மாணவ, மாணவிகள் பங்கேற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற் றன.
மரத்தை பட்டுப்போக செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
சேலம், பிப்.10- சேலம் - ஆத்தூர் பிரதான சாலையில் உள்ள வேப்ப மரங்களை பட்டுப்போக செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். சேலம் மாவட்டம், ஆத்தூர், உடையார்பாளையம் வழி யாக செல்லும் சேலம் – ஆத்தூர் பிரதான சாலையில் மிகப் பெரிய வேப்பமரங்கள் இருந்தன. அதன் பின்பகுதியில் பெரிய வணிக வளாகம் இருந்து வந்தது. அதனை அப்புறப் படுத்தி புதிய வணிக வளாகம் அமைப்பதற்கு பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அங்கிருந்த மரங்களை அந்த இடத்தின் உரிமையாளர் கடந்த இரண்டு நாளில் பட்டுப்போக செய்துள்ளார். தற்போது, அந்த காய்ந்த மரங்கள் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளன. இதனால் விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, நகராட்சி நிர் வாகம் அல்லது நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்து மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், மரங்களை பட்டுப்போக செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வ லர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வனப்பகுதியிலுள்ள குட்டைகளில் தொடர்ந்து நீர் நிரப்ப சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
தருமபுரி, பிப்.10- மொரப்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட காப் புக்காட்டிலுள்ள குட்டைகளில் தொடர்ந்து நீர் நிரப்ப வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண் டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள் ளனர். தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென் னாகரம், ஒகேனக்கல், அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி ஆகிய வனச்சர கங்கள் அமைந்துள்ளன. இதில் அரூர், மொரப் பூர் வனச்சரகத்தில் உள்ள கொளகம்பட்டி, எட்டிப்பட்டி, கீழ்மொரப்பூர் உள்ளிட்ட காப்புக் காடுகளில் மான், மயில், காட்டுப்பன்றி, காட் டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் அதிக ளவில் உள்ளன. வன உயிரினங்களுக்கு வனப்பகுதிகளில் ஆங்காங்கே குட்டைகள், தொட்டிகள் அமைத்து தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால், கோடை காலங்களில் மழை இல்லாத காரணத்தால் உணவு மற்றும் தண்ணீர் தேடி, வனப்பகுதியில் உள்ள விலங் குகள், வனத்தை விட்டு வெளியே வருகின்ற னர். இதனால் வன விலங்குகளை வேட்டை யாடுவதும், வாகனங்களில் விபத்தில் சிக்கி உயிரிழப்பது மற்றும் கிராமப்புறங்களில் நுழையும் போது நாய்கள் துரத்தி கடிப்பது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றது. மொரப் பூர் வனச்சரகத்திற்குட்பட்ட கொளகம்பட்டி காப்புக்காட்டில் உள்ள நர்சரி பகுதியில் சாலையோரம் வனப் பகுதியில் தொட்டி மற் றும் குளங்கள் அமைத்து அதில் வனத்துறை யினர் தினமும் தண்ணீர் நிரப்புகின்றனர். மேலும் மழைக் காலங்களில் வனப்பகுதி யில் வரும் தண்ணீர் உள்ள குட்டைகளில் தேங்கி நிற்கும். அந்த தண்ணீரை வன விலங் குகள் குடித்து தாகம் தீர்த்துக் கொள்ளும். கடந்தாண்டு பருவமழை இல்லாததால், வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகிறது. கோடைகாலம் என்பதால் வனப்பகுதிக்கு உள்ளே உள்ள குட்டைகளில் தண்ணீர் இல்லாததால், மான் வனப்பகுதியை விட்டு வெளியே வருகின் றன. அவ்வாறு வெளியே வரும் வன விலங்கு கள் தொட்டியில் இருக்கின்ற தண்ணீரை குடித்து விட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் செல்கின்றன. இந்த நர்சரி பகுதியில் உள்ள குளத்தில் ஒரு பகுதியில் மட்டும் தண்ணீர் இருப்பதால், தினமும் காலை, மதியம் மற் றும் மாலை நேரங்களில் புள்ளி மான்கள் கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து விட்டு செல்கின்றன. இதனால் வனவிலங்கு கள் வனத்தை விட்டு வெளியேறாமல் பாது காக்கப்படுகிறது. தொடர்ந்து இந்த தொட்டி யில் வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க வருவ தால், அருகிலுள்ள மற்றொரு குளத்திலும் தண்ணீர் நிரப்ப வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீ பரவலை தடுப்பது குறித்த விழிப்புணர்வு
நாமக்கல், பிப்.10- சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, ராசிபுரம் போக்குவரத்து அலுவலகம் சார்பில் தீ பரவலை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. சாலை பாதுகாப்பு மாத விழாவின் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகம் மற்றும் தீயணைப்பு துறை சார்பில், வாகன ஓட்டுநர்களுக்கு வாகனங்களில் தீயணைப்பானை பயன்படுத்தி, தீ பரவலை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பயிற்சி ராசிபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் து.நித்யா தலைமை வகித்தார். இதில், தீயணைப்பு நிலைய அலுவலர் ராமசாமி, சிறப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான வீரர்கள் செயல்முறையுடன் விளக்கினர். முன்னதாக, சாலை விதிகளை மதிப்போம்!, விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம்! என வாகன ஓட்டுநர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
அரசு பள்ளியில் 42 ஆவது சமத்துவ ஆண்டு விழா
தருமபுரி, பிப்.10- அரூர் அருகே உள்ள அரசு பள்ளி யில் நடைபெற்ற 42 ஆவது சமத்துவ ஆண்டு விழாவில், திரளானோர் கலந்து கொண்டனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி யில் 42 ஆவது சமத்துவ ஆண்டு விழா, தலைமை ஆசிரியர் சி.சேகர் தலைமை யில் நடைபெற்றது. ஆசிரியை கே.சங் கீதா வரவேற்றார். ஆசிரியர் ஏ.ஏகநா தன் ஆண்டறிக்கை வாசித்தார். தரும புரி அரசு கலைக்கல்லூரி தமிழ் பேரா சிரியர் கு.சிவப்பிரகாசம் சிறப்பு விருந்தி னராய் கலந்து கொண்டு, தமிழ் இலக் கியங்களில் உள்ள கல்வியின் சிறப்பு கள் குறித்தும், கல்வியினால் உயர்ந்த இடத்தைப் பெற்ற பல்வேறு ஆளுமை கள் குறித்தும் விளக்கிப் பேசினார். இதையடுத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர் த.ம.சொக்கலிங்கம் பரிசளித்து வாழ்த்தினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கே.ஜெகதீசன், பொறுப்பாளர்கள் ஐ.ரமீனா, ராம மூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். அதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்க ளின் கலைநிகழ்ச்சிகளில், அங்கிருந்த வர்களை வெகுவாக கவர்ந்தது. முடி வில், தமிழாசிரியை சு.மாரீஸ்வரி நன்றி கூறினார்.
ஹாலோ பிளாக் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் வாபஸ்
திருப்பூர், பிப்.10- திருப்பூர் மாவட்டத்தில் ஹாலோ பிளாக் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக உற்பத்தி யாளர் சங்கம் அறிவித்துள்ளது. திருப்பூர் மாவட்ட ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் வெள்ளியன்று பல்லடத்தில் சங்கத் தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. செயலா ளர் நாச்சிமுத்து முன்னிலை வகித்தார். இதில், கடந்த வாரம் மூலப்பொருள்களின் விலை உயர்வால் பாதிப்படைந்த ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்த ஒரு வார உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தப் போராட்டத்தை பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக திரும்பப் பெறப்பட் டுள்ளது. ஹாலோ பிளாக் கற்களின் விலை ரூ.4 முதல் ரூ.5 வரை உயர்த்தி விற்பனை செய்ய இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கிரஷர் மற்றும் கல்குவாரி உரி மையாளர்கள் தங்களது உற்பத்தி பொருட்களுக்கு விலை உயர்வு செய்யும்போது ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள், கட்டுமானம் செய்யும் பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். செங்கலுக்கு மாற்றுப் பொருளாக ஹாலோ பிளாக் உள்ளது. அதிக விலை உயர்வு செய்தால் விற்பனை மந்த நிலை ஏற்படும். இதனால் கிரஷர் கல்குவாரி தொழிலும் பாதிக்கும் என்பதால் விலை நிர்ண யம் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டும். ஹாலோ பிளாக் விற்பனைக்கு ஜிஎஸ்டி வரி விதித்த பின்பு 18 சதவீதம் உயர்வு பெற்றதால் சிறு தொழிலான ஹாலோ பிளாக் விற் பனை அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்க கொடுக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ரூ.5.53 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள்: அமைச்சர்கள் துவக்கி வைப்பு
திருப்பூர், பிப்.10- தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் ஆகியோர் சனியன்று ரூ.5.53 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், முடி வுற்ற திட்டப்பணிகளை திறத்து வைத்தார்கள். தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன் தலைமையில், திருப்பூர் மாவட்டம், மூலனூர் பேரூராட்சி ராக்கியாவலசில் ரூ.2.05 கோடி மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி, மேட்டுப்பட்டி அருகில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை புதுப்பிக்கும் பணியினை, பொது நிதி பணிகள் திட்டத்தின் கீழ் ரூ.1.69 கோடி மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, மூலனூர் ஊராட்சி ஒன்றியம், கிளாங்குண்டல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.25.37 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் திட்டத்தின் கீழ் ரூ.73.53 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கட்டடம்,, ரூ.30லட்சம் மதிப்பீட்டில் கிளாங்குண்டல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் கட் டடம் என மொத்தம் ரூ.5.53 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்ப ணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச் சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்து, முடிவுற்ற திட்டப்பணிகளை திறத்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகராட்சி 4 ஆம் மண்ட லத்தலைவர் இல.பத்மநாபன் உட்பட உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
போலி பத்திரிகையாளர் ஒழிப்புச் சட்டம் நிறைவேற்ற கோரிக்கை
திருப்பூர், பிப். 10- இந்திய நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டமன்றத்திலும் போலி பத்திரிகையாளர் ஒழிப்புச் சட்டம் நிறைவேற்ற வேண் டும் என்று திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் கோரி யுள்ளது. திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக கருத்து கேட்பு கூட்டம் சனியன்று திருமுருகன் பூண்டி தனியார் விடுதியில் நடைபெற்றது. திமுக எம்பி கனிமொழி தலைமை யிலான குழுவினர் பங்கேற்று கோரிக்கை மனுக்களை பெற்ற னர். அப்போது திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் தொடங்கப்பட்டு 14 ஆண்டுகள் ஆகிறது. எனவே இம்மாவட்டத்தில் தலைமை இடத்தில் வேலை செய்யும் தகுதி யுடைய அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். அண்மை காலத்தில் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சிலர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு எவ்வித சட்ட சமூக பாதுகாப்பு, இழப்பீடு கிடைக்கவில்லை. எனவே பத்திரிகை யாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டங்கள் அமலாக்க வேண்டும். அண்மையில் உயிரிழந்த மாவட்ட பத்திரிகையா ளர்களுக்கு குடும்ப இழப்பீடு தொகை வழங்க வேண்டும். போலி பத்திரிகையாளர்கள் ஒழிப்பு சட்டத்தை நாடாளுமன் றத்திலும் சட்டமன்றத்திலும் நிறைவேற்ற வேண்டும் என வலி யுறுத்தினர்.
சாலை விபத்தில் குழந்தை உட்பட இருவர் பலி
சாலை விபத்தில் குழந்தை உட்பட இருவர் பலி கோவை, பிப்.10- பெரியநாயக்கன்பாளையம் அருகே கேஸ் கம்பெனி அருகே தனியார் பேருந்து மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நகராட்சி ஊழியர் மற்றும் அவரது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சியில் குடிநீர் பணியாளராக பணியாற்றி வந்த வர் அசோக்குமார்(32). இவரது மனைவி சுசீலா(30). இவர்க ளுக்கு 3 வயதில் சர்வந்த் என்ற குழந்தை உள்ளது. இவர்கள் மூவரும் வெள்ளியன்று மாலை கேஸ் கம்பெனியில் உள்ள தங்களது வீட்டில் இருந்து மாலை இருசக்கர வாகனத்தில் பெரியநாயக்கன்பாளையம் சென்று கொண்டிருந்தனர். வித் யாலய மாற்றுத்திறனாளிகள் மையம் எதிரில் வந்தபோது பொள்ளாச்சியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு அதிவே கமாக சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து இவர்கள் மீது மோதியது. இதில் அசோக்குமாரும் குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதற்குள் தனியார் பேருந்தி லிருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பேருந்தில் இருந்து தப்பி ஓடி விட்டனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டி ருந்த சுசீலாவை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அதிவேகமாக வந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை கைது செய்ய வேண்டும் என ஆவேசத்துடன் பொதுமக்கள் சாலை மறிய லில் ஈடுபட்டனர். இதனால் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்பு சம்பவம் இடத்திற்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் மறியலில் ஈடுபட்டவர்க ளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். விபத்துக்கு காரணமான வர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். கோவையில் பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் தனி யார் பேருந்துகள், கலெக்சனை அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு அதிவேகமாக பேருந்தை இயக்குவதும், விபத்து ஏற்படுவதும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் விபத்து அதிகம் நடைபெற்று உயிரிழப்புகள் ஏற்படும் மாவட்டத்தில் முதல் இடத்தில் கோவை உள்ளது குறிப்பிடத்தக்கது.
மைவி 3 நிறுவன உரிமையாளர் கைது
மைவி 3 நிறுவன உரிமையாளர் கைது கோவை, பிப்.10- கோவையை தலைமையிடமாக கொண்டு மைவி3 ஏட்ஸ் என்ற செயலியை சக்தி ஆனந்தன் என்பவர் நடத்தி வருகி றார். இவர், மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரை களை வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது என அந்நிறு வனத்தின் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த புகா ரின் பேரில் அந்நிறுவனத்தின் மீது சைபர் க்ரைம் காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். அதேபோல அந்நிறுவனம் வி3 ஆன்லைன் டிவி என்ற பெயரில் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியரி டம் புகார் மனு அளித்திருந்தனர். இந்நிலையில் மைவி 3 ஏட்ஸ் நிறுவனம் குறித்து அவதூ றாக பேசி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அந்நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் தலைமையில் ஏராளமானோர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திரண்டனர். காவல் துறையினர் அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியும், கலைந்து செல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட சக்தி ஆனந்த் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
நகை பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து
கோவை, பிப்.10- கோவை மதுக்கரை அருகே நகைப் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங் கரத் தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. கோவை அடுத்த குனியமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான தொழிற்சா லைகள் மற்றும் தொழிற்சாலைகளின் குடோன்கள் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு விதமான பொருட்கள் தயாரிக்கப் பட்டு, தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவ தும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரஷீத் என்பவருக்கு சொந்தமான ‘EMBELLSGE’ என்ற நிறுவனம் மதுக்கரை அடுத்த அறிவொளி நகர பகுதியில் செயல் பட்டு வருகிறது. இங்கு நகைக்கடைகளில், நகைகளை வைக்க பயன்படுத்தப்படும் நகைப்பெட்டிகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு நிறுவனங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் நூற்றுக்கும் மேற் பட்ட ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வரு கின்றனர். இந்நிலையில், வெள்ளியன்று மதியம் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நகைப் பெட்டிகளை தயாரிக்கும் பணியில் ஈடு பட்டிருந்தனர். அப்போது திடீரென நிறுவனத் தின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு தொழிற் சாலை முழுவதும் தீ பரவத் துவங்கி யது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலா ளர்கள், உடனடியாக அங்கிருந்து வெளியே றினர். அடுத்த சில நிமிடங்களில் தொழிற் சாலை முழுவதும் மளமளவென தீப்பிடித்து எரியத் துவங்கியது. நிறுவனத்தின் உள்ளே வார்னிஷ் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூ டிய பொருட்கள் இருந்ததாக கூறப்படுகி றது. இதனால் அதிக வெப்பம் காரணமாக தொழிற்சாலையில் இருந்த இயந்திரங்களும் வெடித்து சிதற துவங்கியுள்ளன. இந்த தீ விபத்து காரணமாக கரும்புகை அந்த பகுதி முழுவதும் சூழ்ந்துள்ளது. இது குறித்து தக வல் அறிந்ததும், கோவைப்புதூர் தீய ணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீர் கொண்டு தீயை அணைக்க முடியாத தால் ரசாயன நுரை கொண்டு தீயை கட்டுப் படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து அருகாமையில் உள்ள பிளாஸ்டிக் குடோனிலும் தீ பரவியது இதையடுத்து 40க்கும் மேற்பட்ட தீய னைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர் பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சம்பவ இடத்தை நீதிபதி பார்வையிட கோரிக்கை
உதகை, பிப்.10- கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் பல்வேறு மாற்றங் கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், நீதிப திகள் அந்த இடத்தை பார்வையிட வேண்டு மென வழக்கின் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கொடநாடு கொலை, கொள்ளை வழக் கின் விசாரணை, உதகை அமர்வு நீதிமன்றத் தில் நீதிபதி அப்துல் காதர் தலைமையில் நடை பெற்று வருகிறது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் வாளையார் மனோஜ் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட் டார். அப்போது, எதிர் தரப்பு வழக்கறிஞர்க ளான விஜயன், முனிரத்தினம் ஆகியோர் வாதிடுகையில், கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் நடந்த இடத் தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. குற்ற சம்பவம் நடைபெற்ற பங்களாவில் மேலும் பல்வேறு துறைகளின் ஆய்வு நடக்க உள்ளது. இதனால், பல்வேறு மாற்றங்கள் ஏற் பட வாய்ப்பு இருக்கும். எனவே, நீதிமன்றம் குற்றம் நடைபெற்ற இடத்தை பார்வையிட வேண்டும் என நீதிபதியிடம் மனு தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து, வழக்கினை இம்மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, மேற்கண்ட மனு மீது அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பதில் தெரிவிக்கவும் கேட்டுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து அரசு தரப்பு வழக் கறிஞர் ஷாஜகான் செய்தியாளர்களிடம் கூறு கையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, ஆய்வகங்களில் உள்ள தொலைத்தொடர்பு சாதனங்களின் அறிக்கை கள் நீதிமன்றத்திற்கு வந்தவுடன், அதன் நகல் களை பெற்றுக்கொண்டு சிபிசிஐடி போலீ சார் தலைமையில் விசாரணை துவங்கப்ப டும், என்றார்.
சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி
சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி ஈரோடு, பிப்.10- சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி ஈரோட்டில் நடை பெற்றது. அதிகரித்து வரும் இணையதள குற்றங்களால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தடுக்க சமூக வலைதளங்களில், வரும் பார்ட் டைம் ஜாப் எனும் விளரம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். பெண்கள் தங்களது புகைப்படங்கள் மற்றும் தகவல்களை பதிவேற்றம் செய்யக்கூடாது. இவ்வாறு பதிவிடுவதன் மூலம் சைபர் கிரைம் குற்றவாளிகள் பெண்களின் புகைப்படங்களை மார் பிங் செய்து பணம் பறித்தல் உள்ளிட்ட மிரட்டல்களில் ஈடுபட ஏதுவாகும். ஓடிபி மற்றும் வேறு வகையில் தங்களது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டால் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். 0424 2265100 என்ற எண்ணிலும், www.cybercrime.gov.in என்ற இணைய தளத் திலும் புகார் தெரிவிக்கலாம். இவை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஈரோடு சைபர் கிரைம் காவல் துறை யின் சார்பில் அரசு தலைமை மருத்துவமனை அருகில் பேரணி நடத்தப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கோவையில் என்ஐஏ சோதனை
கோவையில் என்ஐஏ சோதனை கோவை, பிப்.10- கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் கடந்த ஆண்டு, சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக ஏற் கனவே கோவையில் உள்ள அரபிக் கல்லூரிகளில் தேசிய புல னாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். இந்நிலையில் சனியன்று காலை கோவை நகரில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். உக்கடம், போத்தனூர் உள்ளிட்ட பகுதி களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. உக்கடம் அல் அமீன் காலனியை சேர்ந்த அபிபூர் ரகுமான் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடு பட்டனர். இதேபோன்று தமிழகம் முழுவதும் சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட னர்.
தமிழகத்தில் 20 இடங்களில் என்ஐஏ சோதனை
சென்னை, பிப்.10- சென்னை, கடலூர், திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, இராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி ஆகிய 8 மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட இடங்க ளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் சனிக்கிழ மையன்று சோதனை நடத் தினர். இதில், கோயம்புத்தூ ரில் மட்டும் 12 இடங்களில் சோதனைகள் நடைபெற் றன. கோவை உக்கடத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த கார் வெடிப்பு வழக்கு தொடர் பாக இந்த சோதனை மேற் கொள்ளப்பட்டதாக தகவல் கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் வெளிநடப்பு
மீனவர்கள் விவகாரத்தை விவாதிக்க மோடி அரசு மறுப்பு
புதுதில்லி, பிப்.10- தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படும் விவகாரம் குறித்து மக்க ளவையில் விவாதிக்க மோடி அரசு அனுமதி அளிக்காததால், திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சி எம்.பி.க்கள் மக் களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 9-ஆம் தேதியோடு நிறைவடைவதாக இருந்தது. ஆனால், ராமர் கோவில் குறித்து சிறப்புத் தீர்மா னம் கொண்டுவந்து, ராமர் கோவிலைக் கட்டிய ஒட்டுமொத்த பெருமையும் பிர தமர் மோடியையும், பாஜகவையுமே சேரும் என்று ஜம்பம் அடிப்பதற்காக கூட்டத்தொடர் பிப்ரவரி 10 அன்றும் நீட்டிக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட அயோத்தி ராமர் கோவில் குறித்து விவாதிக்க இரு அவைகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட் டது. பாஜகவானது, ராமர் கோயில் தீர் மானத்தின்போது, தனது எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் நாடாளுமன் றத்திற்கு வர வேண்டும் என்று கொறடா உத்தரவும் பிறப்பித்தது. அதன்படி ராமர் கோவிலைக் கட்டி யதற்கு ‘நன்றி தெரிவிக்கும் தீர்மானம்’ நாடாளுமன்றத்தின் இரு அவைகளி லும் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, “தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொட ர்ந்து கைது செய்யப்படுவது, படகுகள் பறிமுதல் உள்ளாவது உள்ளிட்ட விவ காரங்கள் குறித்து பிரதமர் மோடிக்கு கடி தம் எழுதியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும், எனவே இந்த சம்ப வம் குறித்து அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும்” என்றும் மக்கள வையில் திமுக குழுத்தலைவர் டி.ஆர். பாலு வலியுறுத்தினார். ஆனால், ராமர் கோவில் விவகாரம் குறித்து மட்டுமே விவாதிக்க முடியும் என்று சபாநாயகர் கூறி மறுப்பு தெரி வித்ததால், தமிழ்நாட்டு மீனவர்கள் நல னில் ஒன்றிய அரசு அக்கறை செலுத்த வில்லை என குற்றம்சாட்டியும், காப் பாற்று... காப்பாற்று... தமிழக மீனவர்க ளைக் காப்பாற்று.. என்று தமிழில் முழக்கமிட்டபடியும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதே போல மாநிலங்களவையிலும் திமுக எம்.பி. திருச்சி சிவா மீனவர் விவ காரத்தை பேச வலியுறுத்தினார். அதற்கு அனுமதி வழங்கப்படாத நிலை யில் மாநிலங்களவையிலும் வெளி நடப்புப் போராட்டம் நடைபெற்றது.