சேலம், ஜூலை 28- பிஎஸ்என்எல் ஆப்டிகல் பைபர் இணைப்புகளை தனியா ருக்கு விற்கக் கூடாது என வலியுறுத்தி பிஎஸ்என்எல் தொழிற் சங்க கூட்டமைப்பு சார்பில் ஊழியர்கள் கருப்பு பேஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமாக உள்ள பிஎஸ் என்எல் நிறுவனத்தை படிப்படியாக தனியாருக்கு விற்கும் முடிவை மோடி அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக பணமாக் கல் திட்டத்தின் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனத்தின் சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், நாட்டில் அதிக இணைப்புகளை கொண்ட பிஎஸ்என்எல் ஆப்டிகல் பைபர் இணைப்புகள், பிஎஸ்என்எல் கோபுரங்களை தேசிய பணமாக்கல் திட்டத்தில் தனியாருக்கு விற்கும் முடிவை ஒன்றிய மோடி அரசு எடுத்துள்ளது. இந்திய பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க் கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து பிஎஸ்என்எல் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் போராட் டம் நடத்துவது என அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக சேலம் பிஎஸ்என்எல் மண்டல பொது மேலா ளர் அலுவலகம் முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் எம்பிளாய் யூனியன் மாவட்ட பொருளாளர் எம்.சண்முகம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்ட செயலாளர் கோபால், அதிகாரி கள் சங்க நிர்வாகிகள் சீனிவாசன், தினகரன், ஓய்வூதியர் சங் கத்தின் மாவட்ட செயலாளர் தமிழ்மணி, பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்வம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத் தில் பங்கேற்றனர்.
தருமபுரி
பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பு சார் பில் தருமபுரி பாரதிபுரத்தில் உள்ள பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர் பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் என்எப்டிஇ மாவட்ட செயலாளர் கே.மணி தலைமை வகித்தார். கூட்டமைப்பின் கன் வீனர் பிஎஸ்என்எல்இயூ மாவட்ட செயலாளர் பி. கிருஷ்ணன், பிஎஸ்என்இஏ மாநில பொருளாளர் கிருஷோர்குமார், ஏஐபி எஸ்என்எல் மாவட்ட செயலாளர் இராமசுந்தரம், எஸ்சி, எஸ்டி மாவட்ட தலைவர் சந்திரசேகர், ஜீட்டா மாவட்ட பொறுப் பாளர் ரமேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். முடிவில் எப்என்டிஓ நிர்வாகி நாராயணன் நன்றி கூறினார்.
கோவை

கோவையில் பிஎஸ்என்எல் தலைமையகம் மற்றும் கணபதி, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிஎஸ் என்எல் ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இக்கூட்டமைப்பின் நிர் வாகிகள், எஸ்.மகேஷ்வரன், எஸ்.பாலசுப்பிரமணியன், சாத் தபன், எஸ்.தங்கதுரை, கமலக்கண்ணன் உள்ளிட்ட நிர்வாகி கள் தலைமையில் ஏராளமான பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதி காரிகள் கருப்பு பட்டை அணிந்து ஒன்றிய அரசின் பொதுத் துறை சீரழிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக் கங்களை எழுப்பினர்.