districts

img

மேம்படுத்தப்பட்ட கோவை மாநகராட்சி அறிவியல் பூங்கா

கோவை, ஆக.28- கோவை மாநகராட்சியில் ரூ.51 லட் சம் மதிப்பீட்டில் சுழலும் பெரிஸ்கோப், நியூட்டன் 3 ஆம் விதி உள்ளிட்ட பல் வேறு அறிவியல் சிறப்பம்சங்களுடன் அறிவியல் பூங்கா மேம்படுத்தப்பட்டுள் ளது என மாநகராட்சி ஆணையர் மு. பிரதாப் தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சி, டாடாபாத் அருகே உள்ள அழகப்பா செட்டியார் சாலையில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில், 30 சென்ட் பரப்பளவில் அறிவியல் பூங்கா அமைக் கப்பட்டது. இதனை கடந்த மே 8 ஆம் தேதியன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மாணவர் கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத் தார். இந்த அறிவியல் பூங்கா, காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை யிலும் திறக்கப்படுகிறது. நுழைவுக்கட் டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. இப்பூங்காவில், பெரிஸ்கோப் மாதிரி, பிஎஸ்எல்வி ராக்கெட் மாதிரி, சந்திரா யன் 3  மாதிரி, ஈர்ப்பு கருவிகள், டாக்டர். அப்துல்கலாம் சிலை, கார் கட்ட மைப்பு, மழைவில் வளைவு, சுழலும் பெரிஸ்கோப், ஒலியின் வேகம், தனிம அட்டவணை, அலை இயக்கம், ஈர்ப்பு பந்து, நியூட்டன் 3 ஆம் விதி, பாஸ்கல் சட்டம், மையவிலக்குவிசை, கியர்பெல் மற்றும் செயின் டிரைவ், ஆற்றல் நிறை  மற்றும் மந்தநிலையில் பாதுகாப்பு, மணிக்கூண்டு, சூரிய குடும்பம் உள் ளிட்ட அறிவியல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனை மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு, பயன்பெறுமாறு மாநக ராட்சி ஆணையர் மு.பிரதாப் கேட்டுக் கொண்டுள்ளார்.