districts

img

சிஐடியு பெயர்ப்பலகை திறப்பு

தருமபுரி, டிச.7- தருமபுரி மாவட்டம், பென்னாகரம் நகரத்தில் சிஐ டியு சாலை போக்குவரத்து காந்தி மினி டெம்போ ஓட்டுநர்கள்  நலச்சங்க 3 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் பெயர்ப்பலகை  திறப்புவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சங்கத்தின் கிளைத் தலைவர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். கனக ராஜ் வரவேற்றார். கிளைச் செயலாளர் கார்த்திகேயன் சங்கத் தின் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டச் செயலாளர் கே.ஆனஸ்ட்ராஜ் சங்கத்தின் பெயர்ப்பலகை திறந்து வைத்தார். இதில் மாவட்டத் தலைவர் பெருமாள், மாவட்டப்  பொருளாளர் வெங்கடடேசன், நிர்வாகிகள் ஆசைத்தம்பி, சேட்டு ரஜினி, ஆறுமுகம், செவத்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.