districts

img

இந்தியா கூட்டணி தேர்தல் பணிமனை திறப்பு

சேலம் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில், திமுக  வேட்பாளராக டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார். இந்நிலையில், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் ஓம லூர் சட்டமன்ற தொகுதிக்கென்று தனியாக தலைமை தேர்தல் அலுவலக திறப்பு விழா  நடைபெற்றது. சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ முன்னிலையில், சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.  இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா, ஓமலூர் தாலுகாச் செயலா ளர் ஈஸ்வரன், திமுக, காங்கிரஸ், விடு தலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மக்கள் நீதி மய்யம், தமிழக வாழ்வுரிமை  கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கூட் டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.