districts

img

அரசியல் கட்சி அடையாளங்களை மறைக்க அதிகாரிகள் அலட்சியம்

நாமக்கல், மார்ச் 22- தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலை யில், அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை அகற்றுவ தில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக சமூக ஆர்வலர் கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஏப்.19 ஆம் தேதியன்று மக்களவை தேர்தல் நடைபெற  உள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கான  பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதன்ஒருபகுதியாக அரசி யல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், பேனர்கள், பெயர் பல கைகள் உள்ளிட்ட அனைத்தையும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் செயல்படும் அந்தந்த பகுதியில் உள்ள  தேர்தல் அதிகாரிகள், ஊழியர்களைக் கொண்டு அகற்றி வரு கின்றனர். இந்நிலையில், குமாரபாளையம் மற்றும் பள்ளி பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசியல் கட்சி களின் கொடிக்கம்பங்கள், பிளக்ஸ் பேனர்கள், நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர் களை அகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உள்ளூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்கள் சமூக வலைதளத்தில் அதை பதிவேற்றம் செய்த பிறகே அதி காரிகள் கவனத்திற்கு அது கொண்டு செல்லப்பட்டு, அதன் பிறகு விதிமுறைகளுக்கு மாறாக உள்ள அரசியல் கட்சி களின் படங்கள் பேனர்கள் அகற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.