districts

img

நூறுநாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக வழங்கிடுக

சேலம், ஜூன் 29- சேலத்தில் நூறுநாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக வழங் கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம், தருமபுரி, கோவை மாவட் டங்களின் பல்வேறு பகுதிகளில் அகில இந்திய விவசாய தொழிலா ளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.  தமிழக அரசு தாலிக்கு தங்கம்  என்ற திட்டத்தை மீண்டும் அமல்ப டுத்த வேண்டும். 100 நாள் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக் கும் வேலை முழுமையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சேலம் மாவட் டத்தில் காடையாம்பட்டி வட்டார  வளர்ச்சி அலுவலகம், வாழப்பாடி பேருந்து நிலையம், வெள்ளிரி  வெள்ளி பஞ்சாயத்து அலுவலகம் ஆகிய இடங்களில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தி னர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.  வாழப்பாடியில் சங்க மாவட்ட  தலைவர் வி.தங்கவேல் தலைமை யிலும், வெள்ளரி வெள்ளி காடை யாம்பட்டியில் மாவட்ட செயலாளர் ஜி.கணபதி, துணைத்தலைவர் சின்ராஜ் தலைமையிலும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப் பாட்டத்தில் 700 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண் டனர். 

தருமபுரி

தருமபுரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பாப்பிரெட்டிப்பட்டி துணை வட்டார வளர்ச்சி அலுவல ரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதில், விவசாய‌தொழிலாளர் சங்க  மாவட்ட நிர்வாகி பி.கிருஷ்ண வேணி, மார்க்சிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் தனுசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொள்ளாச்சி

கோவை மாவட்டம், பொள் ளாச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு புதனன்று நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு விவசாய தொழிலா ளர் சங்க பொள்ளாச்சி தாலுகா தலைவர் பி.ஆனந்தராஜ் தலைமை வகித்தார். இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.துரைசாமி, தாலுகா செயலாளர் கே.ஏ.பட்டீஸ் வரமூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி. ஆர்.பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கட்சி யின் தாலுகா செயலாளர் மூ.அன்ப ரசன் உட்பட பலர் கலந்து கொண்ட னர். நிறைவாக, மாவட்ட துணைச் செயலாளர் கே.மகாலிங்கம் நன்றி  கூறினார். தடாகம் பகுதியில்   விதொச கிளைச்செயலாளர் ரங்கம்மாள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், மாவட்ட செயலாளர் ஆர்.செல்வராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கேசவமணி,  மாவட்டக்குழு உறுப்பினர்கள் லெனின் குமார், நா.வெங்கடேஷ், தடாகம் ஊராட்சி உறுப்பினர்கள் ஆர்.பழனிச்சாமி, சௌந்தர்ராஜ், இன்ஜினியரிங் சங்க பொதுச்செய லாளர் சி. துரைசாமி உட்பட பலர்  கலந்து கொண்டனர். சுல்தான்பேட்டையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், விவசாய சங்க துணைத்தலைவர் ரவீந்தி ரன், விவசாய தொழிலாளர் சங்க பொறுப்பாளர் ரவிச்சந்திரன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
 

;