districts

ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவிக்கு லஞ்சம்

மேட்டுபாளையம், நவ.30- சிக்கதாசம்பாளையம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவிக்கு லஞ்சம் வழங்க உடந்தையாக இருந்ததாக ஊராட்சி தலை வர் மீது புகார் எழுந்த நிலையில், விளக்கம் கேட்டு ஊராட்சி தலைவருக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது சிக்கதாசம்பாளையம் ஊராட்சி. இதில், மன்றத் தலைவராக அதிமுகவை சேர்ந்த விமலா, துணைத் தலைவராக திமுக வைச் சேர்ந்த வினோத்குமார் ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர். ஊராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. ஊராட்சி 12 ஆவது வார்டு உறுப்பினர் வினோத்குமார், துணைத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற  வார்டு உறுப்பினர்களுக்கு சிக்கதாசம் பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் முன்னி லையில், 9 வார்டு உறுப்பினர்களுக்கு தலா  ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் தொகை வழங்கியதாக ஊராட்சியின் 9 ஆவது வார்டு  உறுப்பினர் புருஷோத்தமன் என்பவர் கார மடை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு புகார் அளித்தார்.  இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர், கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி  முகமை, மற்றும் சென்னை ஊழல் தடுப்பு மற் றும் கண்காணிப்பு துறை இயக்குநர் ஆகி யோர் பல்வேறு கட்டங்களில் விசாரணை மேற்கொண்டனர். புகார் தொடர்பான செல் போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங் களிலும் வைரலானது. இது தொடர்பாக விசா ரணை செய்ய விசாரணை அலுவலர் நிய மனம் செய்யப்பட்டு விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள் ளது. ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை அறிக்கையில் துறை  ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள பரிந் துரை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து சிக்கதாசம்பாளையம் ஊராட்சி மன்றத் தலை வர் விமலா மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 205 ன் கீழ் சட்ட பூர்வமான விளக்கம் கோரும் அறிவிப்பு அளிக்கப்பட்டுள்ளது.  இதில், சிக்கதாசம்பாளையம் ஊராட்சி துணைத்தலைவராக உள்ள வினோத்குமார், ஊராட்சி துணைத்தலைவராக தேர்ந்தெடுப் பதற்காக சிக்கதாசம்பாளையம் கிராம ஊராட்சியின் வார்டு உறுப்பினர்களுக்கு கிராம ஊராட்சியின் தலைவர் விமலா என்ப வரின் வீட்டில் வைத்து, லஞ்சமாக ரூபாய் ஒரு  லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தது,  ஊழல்  தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை விசா ரணை அறிக்கையில் மூலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 37 ன் படி  துணைத் தலைவர் வினோத்குமார் வேட்பா ளர்களுக்கான தகுதியை இழந்ததாகவும் துணைத் தலைவர் பதவியை வகிக்க தகுதி இழந்தவராகவும் கருதப்படுகிறார். இந்நிகழ் வில் ஊராட்சி மன்ற தலைவர் என்ற முறையில் விமலா லஞ்சம் வழங்க உடந்தையாக செயல் பட்டதால் தனது கடமையில் இருந்து தவறிய தாக கருதப்படுகிறார்.  எனவே, கோவை மாவட்டம், காரமடை வட் டம், சிக்கதாசம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் விமலா என்பவர் மீது ஏற்படுத்தப் பட்ட மேற்படி குற்றச்சாட்டுக்கு இந்த அறி விப்பு கிடைக்கப்பெற்று 15 தினங்களுக்குள் தனது விளக்கத்தினை மாவட்ட ஆட்சியரி டம் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ  சமர்ப்பிக்கப்பட வேண்டும். தவறும் பட்சத் தில் கூறிக்கொள்ள ஏதுமில்லை என கருதி 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205 ன் படி சட்டபூர்வமான நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.