districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மின் கட்டணப் பிரச்சனை: நிட்மா சங்கம் முடிவு

திருப்பூர், அக். 7 – சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் மின் கட்டணப் பிரச்ச னைக்கு தமிழக அரசு தீர்வு காணக் கோரி திங்களன்று மாவட்ட  ஆட்சியரிடம் தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு  சார்பில் மனுக் கொடுக்கும் நிகழ்ச்சியில் நிட்மா சங்கத்தினர்  பெருந்திரளாகப் பங்கேற்பதென்று முடிவு செய்யப்பட்டுள் ளது. நிட்மா சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சனியன்று சங்க  அலுவலகத்தில் தலைவர் அகில் சு.ரத்தினசாமி தலைமையில்  செயலாளர் ராஜாமணி முன்னிலையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மின்சாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் இயக்கத்தில் நிட்மா சங்கம் சார்பில் முழு ஒத்துழைப்புக் கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. குறிப்பாக திங்களன்று காலை மாவட்ட ஆட்சியர் சந்திப்பு  நிகழ்ச்சியில் நிட்மா உறுப்பினர்கள் அனைவரும் தவறாது  கலந்து கொள்வது, அத்துடன் அன்றைய தினம் அனைத்து  நிறுவனங்களிலும் கருப்புக் கொடி கட்டி தங்கள் எதிர்ப்பைப்  பதிவு செய்வது என்றும் நிட்மா கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது. இத்துடன் வரும் 16ஆம் தேதி சென்னையில் நடை பெறும் தொழில் துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பின் உண் ணாவிரதப் போராட்டத்தில் நிட்மா சங்கத்தின் சார்பில் பெருந் திரளானோர் பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள் ளதாக நிட்மா செய்திக்குறிப்பில் கூறியுள்ளனர்.

இலவச தொழில் பயிற்சி

திருப்பூர், அக். 7 - திருப்பூர் மாவட்ட ஊராட் சிக்கு உட்பட்ட கிராமங் களில் வசிக்கும் வறுமைக்  கோட்டிற்கு கீழ்வாழும் மக்களுக்கு திருப்பூர் அனுப் பர்பாளையத்தில் உள்ள கனரா வங்கியின் கிராமப்புற  சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் “இலவச ஏசி ,ஃப்ரிட்ஜ் பழுதுபார்ப்பு மற் றும் சர்வீசிங் பயிற்சி ” வகுப்பு வரும் திங்களன்று தொடங்குகிறது. 30 நாள்  முழு நேரப் பயிற்சியில் பங் கேற்க விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுவோ ருக்கு கட்டணமில்லை, உணவு, தேநீர் வழங்கப்ப டும். பயிற்சிக்குப் பின் சான்றி தழ் மற்றும் கடன் பெறுவ தற்கான ஆலோசனைகள் வழங்கப்படும். விவரங்க ளுக்கு தொலைபேசி: 948904 3923, 9952518441, 8610533436 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளும்படிபயிற்சி நிலைய இயக்குனர் சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மாணவிகள் போராட்டம் எதிரொலி

தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்

சேலம், அக்.7- அரசு பள்ளி மாணவிகள் போராட்டத்தை தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியை வேறு பள்ளிக்கு இட மாற்றம் செய்து கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.  சேலம் மாநகரம் கோட்டை பகுதியில் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் 2 ஆயிரத்திற்கும்  அதிகமான மாணவிகள்  பயின்று வருகின்றனர். மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில்  போதிய அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, குடிநீர் தொட்டி யில் கிடந்த புழுவை சுட்டி காட்டிய குற்றத்திற்காக மாணவி களை தண்டித்த தலைமை ஆசிரியை தமிழ்வாணியை கண்டித்து வெள்ளியன்று 300க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தை தொடர்ந்து பள்ளியில், மாவட்ட கல்வி  அலுவலர் விசாரணை மேற்கொண்டார். மாணவிகளின் குற்றச்சாட்டை மறுத்த தலைமை ஆசிரியை, ஆசிரியர் களின் தூண்டுதலின் பேரில், மாணவிகள் போராடுவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார். இருப்பினும் கல்வி அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாணவிகளின் புகாரை தொடர்ந்து,  தலைமை ஆசிரியை தமிழ்வாணி இளம்பிள்ளை அரசு ஆண் கள் மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்து முதன்மை  கல்வி அதிகாரி கபீர் உத்தரவிட்டுள்ளார்.

பப்ஸ் சாப்பிட்ட குழந்தைகள் மயக்கம்- பேக்கரிக்கு சீல்

சேலம், அக்.7- எடப்பாடி அருகே பப்ஸ் சாப்பிட்டு மூன்று குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை யடுத்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், பேக்கரிக்கு  சீல் வைத்துள்ளனர்.  சேலம், எடப்பாடி, கொங்கணாபுரம் பகுதியில் உள்ள பேக்கரியில் அதே பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர்  முட்டை பப்ஸ் வாங்கியுள்ளார். இதனை அவரது, மூன்று குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார். அந்த பப்ஸை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மூன்று குழந்தைகளும் மயங்கி விழுந்துள்ளனர். இதனையடுத்து, மூன்று குழந்தைகளை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.  இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், பேக்கரிக்கு சீல் வைத்து விசாரணை  நடத்தி வருகின் றனர். சமீபத்தில் நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது  சிறுமி மரணமடைந்தார். மேலும், 43 பேர் வாந்தி, மயக்கம்  ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர் என்பது குறிப்பிடதக்கது. 

ஆலயத்தில் புகுந்து ரகளை 8 பேர் மீது வழக்குப் பதிவு

கோவை, அக்.7- தேவாலயத்தில் நுழைந்து ரகளை ஈடுபட்ட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  கோவை, பந்தய சாலை பகுதியில் சிஎஸ்ஐ தேவாலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அறுவடை விழா நடைபெறுவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு அறுவடை விழாவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சிஎஸ்ஐ தேவா லயத்தை சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தோடு பங்கேற்பதற்காக வந்திருந்தனர். அந்த சமயத்தில் சிஎஸ்ஐ திருச்சபையின் நிர்வாகிகள் என கூறி சிலர் அடியாட்களுடன் நுழைந்து அறுவடை விழாவை நடத்தக்கூடாது என தகராறு செய்தனர்.  இந்த சமயத்தில் அறுவடை விழாவிற்காக பொதுமக்கள் நன்கொடையாக வழங்கிய ரூ.10 லட்சம் மற்றும் பொதுமக்கள் காணிக்கையாக கொடுத்திருந்த தங்க நாண யங்கள் ஆகியவற்றை தகராறில் ஈடுபட்ட வர்கள் திருடிச் சென்றுள்ளனர்.  இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையரிடத்தில் புகார் அளித்தனர்.  இதை தொடர்ந்து பந்தய சாலை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், அறுவடை விழாவின் போது தகராறில் ஈடுபட்டதாக டேவிட் சாலமன், ராபின்சன் சாலமன், பரணபாஸ் வசந்தகுமார், ஆர்.ஏ. பிரபாகரன், அவரது மகன் நிஷாந்த், ராமமூர்த்தி என்பவரின் மனைவி கிரேஸ், ராஜா சுகுமார் மற்றும் ஜோஸ்வா நைட் ஆகிய  எட்டு பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள  நபர்களை தேடி வருகின்றனர்.

வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்

சேலம், அக்.7- சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக் கறிஞர்கள் சங்க தேர்தலில் 2000க்கும் மேற்பட்ட வழக்க றிஞர்கள் வாக்களித்தனர்.  சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சேலம்  வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நடத்துவது வழக்கம். இதன் தொடர்ச்சியாக சேலத்தில் சனியன்று வழக்கறிஞர்கள் சங்க  தேர்தல் நடைபெற்றது.  காலை 10 மணியளவில் வாக்குப்பதிவு துவங்கியது. இதில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொரு ளாளர், நூலகர் உள்ளிட்ட 17 பதவிகளுக்கு தேர்தல் நடை பெற்றது. தேர்தலையொட்டி காலை முதலே வழக்கறி ஞர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சேலம்  வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேந்திரன் ஆகி யோரும் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்ததும், இரவே  வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

சரக்கு வாகனங்களை மறித்து வழிப்பறி

போக்குவரத்து காவலர்களின் அடாவடியால் லாரி ஓட்டுநர்கள் அவதி

பவானியைக் கடந்து செல்லும் சரக்கு வாகனங்களுக்கு அபராதம் என்ற பெயரில், போக்குவரத்து காவல் துறையினர் வழிப்பறியில் ஈடுபடுவ தாக லாரி ஓட்டுநர்கள் குற்றம்சாட்டு கின்றனர்.  பெருநகரங்களில் போக்குவரத்து  நெரிசலைத் தவிர்க்க சரக்கு லாரிகள்  உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல் லும் நேரம் குறித்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ஆனால், சிறு நகரங்களுக்கும் அதுபோன்ற கட்டுப் பாடுகள் விதிப்பது தேவையற்றது. அந்தவகையில் ஈரோடு மாவட்டம், பவானியில் காலை 6 முதல் 11 மணி  வரை, பிற்பகல் 3 முதல் இரவு 10 மணி  வரை லாரிகள் அனுமதிக்கப்படுவ தில்லை. இந்த கட்டுப்பாடு உள் ளூரில் லோடு இறக்கும் வண்டி களுக்கு விதித்தால் புரிந்து கொள்ள  முடியும். ஆனால், நகரைக் கடந்து  அந்தியூர், ஆப்பக்கூடல், மேட்டூர்  செல்லும் வாகனங்களை நிறுத்து கின்றனர். ஊருக்குள் போகக்கூடாது என்று  போக்குவரத்து காவலர்கள் சொல்வ தில்லை. நகருக்குள் விட்டு வரிசை யில் நிற்க வைத்து போக்குவரத்து நெருக்கடியை திட்டமிட்டே உரு வாக்குகின்றனர். இதனால், வாகன  ஓட்டுநர்கள் மிகவும் சிரமப்படுகின் றனர்.  இதுகுறித்து பவானியை சேர்ந்த  சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகை யில், ஈரோடு போன்ற பெரிய நகரங் களுக்குள் குறிப்பிட்ட நேரத்திற்கு வர வேண்டாம் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியும். அது தவிர்க்க முடி யாது என்பது உண்மை. ஆனால், பவானி சிறிய நகரம் தான். அப்படி ஒன்றும் பெரிய நகரம் இல்லை. போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படு வதில்லை. நகரில் இரண்டே சாலை கள் மட்டும் தான் உள்ளது. அதுவும் ஒரு வழிப்பாதையாகத்தான் உள்ளன.  எனவே, ஒரு சாலையில் வாகனங்கள் செல்கின்றன. மறு மார்க்கமாக வாக னங்கள் வருகின்றன. ஆகவே நெரிசல்  ஏற்பட வாய்ப்பே இல்லை. ஆனால், தடுத்து நிறுத்தப்படும் வாகனங்களை நகரைக் கடந்து செல்ல வேண்டாம் என சொல்வதில்லை. மாறாக, போக்குவரத்து காவலர்கள் ரூ.500 முதல் ரூ.2000 வரை அபராதம் வசூலிக் கின்றனர். பின்னர் நகரைக் கடந்து செல்ல அனுமதிக்கின்றனர்.

நெரிசல் இல்லாத நகரத்தில் இவ்வாறு செல்லும் வாகனங்களை நிறுத்தி காவல்துறையினர் தான் நெரிசலை ஏற்படுத்துகின்றனர். இவ்வாறு ஏற் படும் தாமதத்தினால் சரக்குகள் குறிப் பிட்ட நாளில் சென்று சேர முடியாத நிலை ஏற்படும். பின்னர், விட்டால் போதும் என நினைத்து வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று சேர வேண்டும் என்பதால் அதிவேகமா செல்கின்றனர். இதனால், விபத்து கள் ஏற்படுகிறது.  அதேசமயம் வேறு மார்க்கமோ, வழியுமில்லை. லட்சுமி நகரிலிருந்து கவுந்தப்பாடி சாலையில் மூலப் பாளையம், சத்தி சாலையில் காடை யாம்பட்டி வழியாக குருப்பநாய்க் கன்பாளையம் பகுதியை அடையும் வகையில் புறவழிச்சாலை அமைக் கப்படுகிறது. அந்த பணிகள் முடிய சில ஆண்டுகளாகும்.  இந்நிலையில் கோவை, பொள் ளாச்சி, காங்கயம், தாராபுரம், கேரளம் போன்ற பகுதிகளிலிருந்து மேட்டூர், தருமபுரி வழியாக பெங் களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு மிசினரிகள், நெல், எண்ணெய், உணவு பொருள்கள் உள் ளிட்ட பலவிதமான பொருள்கள் செல்லும் வாகனங்கள் பாதிக்கப்படு கிறது. தட்டக்கரை, தாமரக்கரை வழி யாக மைசூர் செல்லும் வாகனங் களும் தடுக்கப்படுகிறது. சாலையின் குறுக்கே தடுப்பு களை அமைத்துக் கொண்டு போக்கு வரத்து நெரிசலை ஏற்படுத்துகின் றனர். இது அதிகார துஷ்பிரயோக மாக உள்ளது. ஒவ்வொரு ஊரிலும் 8 மணி நேரம், 5 மணி நேரம் வழியில் நின்றால் சரக்கு போய் சேருவது எப் போது  என வாகன ஓட்டுநர்கள் கேள்வி  எழுப்புகின்றனர். - எஸ்.சக்திவேல்