districts

பயத்தில் புளுகும் மோடி: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

சேலம், மார்ச் 19- சேலத்தில் பாஜக சார்பில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியவை அனைத்தும், உண்மைக்கு மாறாக உள்ளதென அவரை இணையதள வாசிகள் வறுத் தெடுத்து வருகின்றனர். பாஜகவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் சேலத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், தமிழகத்தில் சேலம் மிகச்சிறந்த ஊர் எனவும், தனக்கு 40 முதல் 50 ஆண்டுகளுக்கு முன்பு கைலாஷ் யாத்திரை சென்ற போது, சேலத்தைச் சேர்ந்த ரத்தின வேல் என்பவர் உடன் பயணித்தேன். அப்போது, அவர் சேலத்தின் பெரு மைகளை தனக்கு கூறியதால் சேலம் இன்றியமையாத இடம் பிடித்துள்ள தாக பாஜக தொண்டர்களிடையே பேசினார். மேலும், தமிழகத்திற்கு போதிய நிதியை அளித்துள்ளதாக வும், மேலும் பல நிதிகளை தமிழ கத்திற்கு தரப்போவதாகவும் பேசிய மோடியின் பேச்சிற்கு நெட்டிசன்கள் தங்களின் கருத்துகளால், அவரை வறுத்து எடுத்து வருகின்றனர். குறிப் பாக, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதியை முறையாக செலுத்தாத மோடி அரசு, எப்படி தமிழகத்தில் வெற்றி பெற முடியும் எனவும், உண்மைக்கு புறம்பாக பேசுபவர் மோடி எனவும், புயல் காலத்தில் கூட வழங்க வேண்டிய நிதியை தமிழக  மக்களுக்கு வழங்காத மோடி, தற் போது தேர்தல் பயத்தால் அடிக்கடி தமிழகத்திற்கு வந்து தேர்தல் பரப்பு ரையில் ஈடுபட்டிருப்பது, அப்பட்ட மான தேர்தல் நாடகம் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், தேர்தல் கூட்டத்தில் தனக்கு சேலத்தை சேர்ந்த நண்பர் ஒருவர் இருந்து சேலத்தையும் பெரு மைகளை கூறியது என பேசியிருப் பது “உலக மகா பொய்” எனவும், “அண்டபுளுகு ஆகாச புளுகு என் றால் அது இதுதான்” எனவும் நெட் டிசன்கள் இணையதளத்தில் வறுத் தெடுத்து வருகின்றனர். நாடு தழு விய அளவில் ஏழு ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்பட்டதில் தமிழகமும் ஒன்று என மோடி பேசியது வேடிக் கையானது. சேலத்தில் மையமாக இளம்பிள்ளை பகுதியில் தயாரிக்கப் படும் சேலைகள் உலகத்தரம் வாய்ந்த அளவில் பிரசித்தி பெற்ற இருந்தும்  ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி விதிப்பால்  தொழில் பாதிப்பு ஏற்பட்டு, இன்று  அந்த தொழிலை செய்யும் விசைத் தறி தொழிலாளர்கள் பாதிப்படைந்த நிலையில் வெந்த புண்ணில் வேளை பாய்ச்சுவது போல் உள்ளது எனவும் இணையதள வாசிகள் வன்மையான கண்டனங்களை பதிவு செய்து வரு கின்றனர். பாஜகவின் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் என்ற பெயரில் ஏற்பாடு செய் திருந்த அரங்கம் சொற்ப அளவிற்கே இருந்தது. முறையான குடிநீர் உள் ளிட்ட ஏற்பாடுகளை செய்யாததால் பொதுக்கூட்டத்திற்கு வந்த தொண் டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. காலை 9 மணிக்கு அரங்கத்திற்குள் வந்திருந்த பொதுமக்கள் மோடியின் வருகை மதியமானதால் பொறு மையை இழந்து அங்கும், இங்கும் சென்ற வண்ணமே இருந்தனர். மோடி பேச ஆரம்பித்த சிறிது நேரத் திலேயே பாஜக தொண்டர்களே கூட் டத்தை விட்டு வெளியேறிய நிகழ் வும் நடைபெற்றது.