districts

வெள்ளலூர் குப்பை கிடங்கு விவகாரம்

கோவை, அக்.25- மக்கள் வாழவே தகுதியற்ற நிலையில் வெள்ளலூர் குப்பைக் கிடங்கு ஆக்கிரமித்து உள்ளதால், உடனடியாக தேங்கிய குப்பை களை அகற்றிடவும், இனி குப்பை கள் வராமல் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என தேசிய பசுமை தீர்ப் பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவை, வெள்ளலூர் பகுதி யில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கு வளாகத்தில் 15.5 லட்சம் கியூபிக் மீட்டர் அளவிற்கு குப்பை கள் குவிந்துள்ளது.  இந்த குப்பை களால் வெள்ளலூர் மற்றும் அதன்  சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் மாசடைந்துள்ளது.  காற்று  நீர் சுற்றுச்சூழல் மாசு காரணமாக  பொதுமக்கள் கடும் பாதிப்பிற்குள் ளாகியுள்ளனர். வெள்ளலூர் பகுதி யில் மக்கள் வாழ முடியாத அள விற்கு சூழல் உருவாகியுள்ளது.  இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீரை பயண்படுத்தப்படுவதால், பலருக்கும் ஆஸ்துமா, தோல் வியாதி உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள்  வந்து கொண்டிருந்தது. இது குறித்து ஆய்வு மேற்கொண்ட அதி காரிகளிடத்தில், தண்ணீர் கருப் பாக இருப்பதாகவும், துர்நாற்றம்  வீசுவதாகவும் தெரிவித்தனர். மேலும், இங்குள்ள குப்பைக் கிடங்கால் ஈ, கொசு தொல்லை களும், செல் பூச்சிகளும் படை யெடுத்து வருவதாக தெரிவித் தனர்.  ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் இப்பகுதி மக்களின் அடுத்தடுத்த புகார்களை கேட்டதோடு சரி, எவ் வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என சமூக செயற்பாட்டா ளர்களும் வேதனை தெரிவித்தனர். இவ்வளவு புகார்கள் இருந்த போதிலும் கோவை மாநகராட்சி மேலும் மேலும் குப்பைகளை  குவித்தே வருகிறது.  இந்நிலையில், வெள்ளலூர் குப்பை கிடங்கில் உள்ள குப்பை களை அகற்றுவது  தொடர்பாக பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு  தொடரப்பட்டுள்ளது. இது தொடர் பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது . இந்நிலையில் அண்மை யில், பசுமை தீர்ப்பாயத்தில் இது தொடர்பான விசாரணை வந்தது.  அப்போது குப்பைகளை அகற்ற மாநகராட்சி சார்பில் என்ன நடவ டிக்கை எடுக்கப்பட்டது.  குப்பைகள்  அகற்றும் பணியில் போதுமான  அளவு சல்லடை உருளை இயந் திரங்கள் கையாளப்படவில்லை.  பணிகள் விரைவாக நடக்க வில்லை.  மாநகராட்சி நிர்வாகம் விரைவாக செயல்பட வேண்டும் .  மழைக்காலமாக இருப்பதால் பாதிப்பு அதிகமாகிவிடும். எனவே  நடவடிக்கையில் தீவிரம் காட்ட  வேண்டும் என பசுமை தீர்ப்பாயத் தால் எச்சரிக்கை விடப்பட்டது. மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பை சரி செய்ய ரூ80 லட்சம் முதலீடு செய்ய உத்தரவிடப்பட்டது.  ஆனால் அதுவும் இதுவரை அமல் படுத்தப்படவில்லை. பல்வேறு இடங்களில் குப்பை மாற்று நிலை யங்கள் மற்றும் குப்பை சேகரிப்பு நிலையங்கள் அமைத்து வெள்ள லூர் குப்பை கிடங்குக்கு குப்பை கள் வருவதை  தடுக்க வேண்டும்.  ஏற்கனவே தேங்கி கிடக்கும் பழைய  குப்பைகளை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.  ஊருக்கு ஒதுக்குப்புறமாய் சுத்தமான காற்றை சுவாசிக்கலாம் என நகரத்தில் இருந்து வெள்ளலூர்  பகுதிக்கு வீடு கட்டி குடியேறிய வர்களும், வெள்ளலூரை பூர்விக மாக கொண்டவர்களும், இந்த குப்பைக்கிடங்கு பிரச்சனையால் அன்றாடம் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். தேசிய பசுமைத் தீர்ப்பா யத்தின் எச்சரிக்கையை தொடர்ந் தாவது, துரித நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.