districts

நாமக்கல்: 14 வட்டாட்சியர்கள் இடமாற்றம்

நாமக்கல், ஜூன் 12- நாமக்கல் மாவட்டத்தில் பணி யாற்றி வந்த 14 வட்டாட்சியர்களை இட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் 14 வட்டாட் சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள் ளனர். அதன்படி நாமக்கல்லில் சென்னை - கன்னியாகுமரி தொழிற்த டத்திட்டத்தின் தனி வட்டாட்சியரான  மாதேஸ்வரி, ஆதிதிராவிடர் நலத் துறை தனி வட்டாட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.  பேரிடர் மேலாண்மை பிரிவின் வட் டாட்சியர் ராஜேஷ்கண்ணா, சென்னை கன்னியாகுமரி தொழிற்தடத்திட்டத் தின் வட்டாட்சியராக நியமிக்கப்பட் டார். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவ னத்தின் துணை மேலாளராக பணி யாற்றி வந்த சக்திவேல், பேரிடர் மேலாண்மை பிரிவின் தனி வட்டாட் சியராகவும், திருச்செங்கோட்டில் சென்னை - கன்னியாகுமரி தொழிற்த டத்திட்டத்தின் தனி வட்டாட்சியராக பணியாற்றி வந்த செல்வராஜ், தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் துணை மேலாளராகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலக தனி வட்டாட்சியர் (தேர் தல்கள்) சுப்பிரமணியன், சென்னை கன்னியாகுமரி தொழிற்தடத்திட்டத் தின் திருச்செங்கோடு தனி வட்டாட்சிய ராகவும், திருச்செங்கோடு நகர நில வரித்திட்ட தனி வட்டாட்சியர் சசிகலா, குமாரபாளையம் நகர நிலவரித்திட்ட தனி வட்டாட்சியராகவும், பரமத்தி வேலூர் வட்டாட்சியர் கண்ணன், திருச் செங்கோடு நகர நிலவரித்திட்ட தனி வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்ட னர். குமாரபாளையத்தில் சமூக பாது காப்பு திட்ட தனி வட்டாட்சியராக பணி யாற்றி வந்த சிவக்குமார், பரமத்தி வேலூர் வட்டாட்சியராகவும், குமார பாளையம் நகர நிலவரித்திட்ட தனி வட்டாட்சியர் ஜானகி, குமாரபாளை யம் சமூக பாதுகாப்பு திட்ட தனிவட் டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.  மேலும், நாமக்கல் டாஸ்மாக் உதவி மேலாளர் ராஜேஷ், நாமக்கல் நில எடுப்பு அலகின் தனி வட்டாட்சி யராகவும், நாமக்கல் நில எடுப்பு அல கில் தனி வட்டாட்சியராக பணியாற்றி வந்த லோகநாதன், நாமக்கல் டாஸ் மாக் உதவி மேலாளராகவும், நாமக்கல் குடிமைப்பொருள் வழங்கல் பிரிவின் தனி வட்டாட்சியர் பிரகாசம், பரமத்திவேலூரில் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், சேந்தமங்கலம் வட்டாட்சியர் சுரேஷ், நாமக்கல் குடிமைப்பொருள் வழங்கல் பிரிவின் தனி வட்டாட்சியராகவும், பரமத்திவேலூர் சமூக பாதுகாப்பு  திட்டத்தின் தனி வட்டாட்சியர் செந்தில் குமார், சேந்தமங்கலம் வட்டாட்சிய ராக நியமிக்கப்பட்டதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.