districts

img

அரசுப்பணி தொகுதி 4 தேர்வர்களுக்கு மாதிரித் தேர்வு

திருப்பூர், பிப்.22 - தமிழ்நாடு அரசுப் பணி ஆணையத்தின் தொகுதி 4 தேர் வர்களுக்கான மாதிரி தேர்வுத் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சனி யன்று நடைபெற்றது. தமிழ்நாடு தேர்வாணையம் சார்பில் கிராம நிர்வாக அலுவ லர், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், தட்டச்சர், சுருக் கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு தொகுதி 4 தேர்வு  ஜூலை மாதம்  நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில், தொகுதி 4 தேர்வுக்குத் தயாரா கும் தேர்வர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு கடந்த ஜனவரி  மாதம் 3ஆம் தேதி தொடங்கியது. இதில் 200க்கும் மேற் பட்ட தேர்வர்கள் கலந்து கொண்டு இலவச பயிற்சி பெற்று  வருகின்றனர். பயிற்சி வகுப்பு மட்டுமல்லாது 15 நாட்களுக்கு  ஒரு முறை மாதிரித் தேர்வு நடத்தப்படுகிறது. அதன் ஒரு  பகுதியாக சனியன்று தொகுதி 4 தேர்வு எழுதும் தேர்வர்க ளுக்கு மாதிரித் தேர்வு நடைபெற்றது. 192 தேர்வர்கள்  பங்கேற்று மாதிரி தேர்வை எழுதினர். இந்த மாதிரித் தேர்வில்  முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற தேர்வர்களுக்கு மாவட்ட  ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் பரிசு வழங்கிப் பாராட்டுத் தெரிவித் தார். மேலும் போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் அதிக  அளவில் மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்க்க வேண்டும் என் றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் முக மது ரியாஸ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ்,  உதவி திட்ட அலுவலர்  சரவணன் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.