districts

வளர்ச்சி திட்டப்பணிகள் : அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு

நாமக்கல், ஜூலை 5- வெண்ணந்தூர் பேரூ ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.01 கோடி மதிப்பீட் டிலான வளர்ச்சித்திட்ட பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் பேரூராட்சி, 14 ஆவது வார்டு பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் விளை யாட்டு சாதனங்கள், நடைபாதை, ஆழ்துளை கிணறு உள்ளிட்ட வசதிகளுடன் 3 ஆயிரத்து 600 சதுர அடி பரப்பள வில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார். இதைத்தொ டர்ந்து 8 ஆவது வார்டு பகுதியில் மூலதன நிதித்திட்டத்தின் கீழ்  ரூ.81.64 லட்சம் மதிப்பீட்டில் 1,200 மீட்டர் நீளத்திற்கு மழை  நீர் வடிகால் அமைக்கும் பணியையும் அமைச்சர் மதிவேந் தன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் ஆர்.எஸ்.எஸ்.ராஜேஷ், துணைத்தலைவர் மாதேஸ்வரன் உட்பட அரசு அலு வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.