districts

img

இடங்கணசாலை நகராட்சி: வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

இளம்பிள்ளை, பிப்.6 -  இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட கே.கே.நகர் பகுதி யில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிறன்று வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட இடங்கணசாலை நகராட்சியில் திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இதில், திமுக-25, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 1, காங்கிரஸ்-1 என மொத்தம் 27 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார். முன்னதாக, சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்பாளர்களை வாழ்த்தி பேசி னார். இக்கூட்டத்தில் திமுக மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.