districts

img

தனியார் ஸ்கேன் சென்டருக்கு பரிந்துரைத்த அரசு நரம்பியல் மருத்துவருக்கு மெமோ!

திருப்பூர், ஜூன் 24 - திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம னையில் பரிசோதனைக்கு வந்தவரை தனியார் ஸ்கேன்  சென்டரில் ஸ்கேன் செய்து வரும்படி பரிந்துரை செய்த  நரம்பியல் மருத்துவருக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் பகுதியை சார்ந்த வர் எஸ்.மணிகண்டன். இவர் மூளை நரம்பியல் நோய்  தொடர்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம னைக்கு கடந்த 14ஆம் தேதி சிகிச்சைக்கு வந்துள்ளார். அவரை பரிசோதித்த நரம்பியல் மருத்துவர் சிவக்குமார், ஒரு  வார காலத்துக்கு மாத்திரைகள் கொடுத்துள்ளார். ஒரு வாரம்  கழித்து மறு பரிசோதனைக்கு மணிகண்டன் சென்றபோது, நரம்பியல் மருத்துவர் எந்த பரிசோதனையும் செய்யாமல், திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள கிரிஸ்டல் நியூரோ சென்டர் என்ற தனியார் ஸ்கேன் சென்டரில் இஇஜி, வீடியோ இஇஜி, பிரைன் மேப்பிங் உள்ளிட்ட ஸ்கேன் செய்து வரும்படி பரிந்துரைத்திருக்கிறார். அங்கு ஸ்கேன்  கட்டணம் குறித்து கேட்டபோது ரூ.7 ஆயிரம் ஆகும் என்று  கூறியுள்ளனர். தனியார் மருத்துவமனையில் செலவு செய்ய முடியா மல்தான் அரசு மருத்துவமனைக்கு நாடி வந்ததாக கூறிய  மணிகண்டன் இது குறித்து அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை முதல்வர் மருத்துவர் எஸ்.முருகேசனிடம் புகார் மனு அளித்தார். அரசு மருத்துவக் கல்லூரி நரம்பியல்  மருத்துவர் தனியார் நிறுவனத்திற்கு பரிந்துரைத்தது குறித்து  உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.  மேலும் தனக்கு ஏற்பட்டுள்ள நாக்கு கடி தொடர்பான மூளை  நரம்பியல் நோய்க்கு உரிய சிகிச்சை அளிக்குமாறும், மூளை  தொடர்பான மூன்று பரிசோதனைகளை கோவை மாவட்ட  அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக எடுக்க பரிந்துரை கடிதம் வழங்குமாறும் மணிகண்டன் இதில்  கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் கே.கோபாலகிருஷ்ணன், நரம்பியல்  மருத்துவர் சிவக்குமாருக்கு மெமோ கொடுத்திருப்பதா கவும், இப்பிரச்சனயைில் விசாரணை நடத்தி அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

;