திருப்பூர் ஜூலை 27- திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கி ணைந்த மருத்துவ முகாம் வருகிற 30 தேதி முதல் தொடங்குகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது:- மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் பெறுவதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங் கிணைந்த மருத்துவ முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. வருகிற 30 ஆம் தேதி உடு மலை ஜி.விசாலாட்சி கலை அறிவி யல் கல்லூரியிலும், அடுத்த மாதம் 5 ஆம் தேதி ஊத்துக்குளி அரசு ஆண் கள் மேல்நிலைப்பள்ளியிலும், 6ஆம் தேதி பல்லடம் அரசு கலை அறிவியல் கல்லூரியிலும், 12ஆம் தேதி பொங்க லூர் அரசு உயர்நிலைப்பள்ளியிலும் 13ஆம் தேதி மூலனூர் அரசு மேல் நிலைப்பள்ளியிலும் மருத்துவ முகாம் நடக்கிறது. இதுபோல் 18 ஆம் தேதி திருப்பூர் எல்.ஆர்.ஜி. கலை அறிவியல் கல்லூரியிலும், 26ஆம் தேதி வெள்ளகோவில் அரசு ஆண் கள் மேல்நிலைப்பள்ளியிலும், 27ஆம் தேதி தாராபுரம் அரசு உயர்நி லைப்பள்ளியிலும், செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி குண்டடம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், 3ஆம் தேதி பெதப்பம்பட்டி என்.வி.பாலி டெக்னிக் கல்லூரியிலும், 9ஆம் தேதி மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும்,
17ஆம் தேதி அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி யிலும், 24ஆம் தேதி காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் தேசிய அடையாள அட்டை வழங்கு தல், நலவாரியத்தில் பதிவு செய்தல், தனித்துவம் வாய்ந்த ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை வழங்குவதற்கு பதிவு செய்தல் பணிகள் மேற் கொள்ளப்படும். பராமரிப்பு உதவித் தொகை, வங்கிக்கடன் மானியம், உதவி உபகரணங்கள், வருவாய்த்து றையின் மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு, புதுப்பித்தல், தனியார் துறை வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொ டுக்கப்படும். மாவட்ட தொழில் மையம் மூலம் கிடைக்கும் உதவிகள் உள்ளிட்டவற்றை ஒரே இடத்தில் இந்த முகாமில் வழங்கப்படும். முகா முக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, தனித்து வம் வாய்ந்த ஸ்மார்ட் கார்டு, அடை யாள அட்டை, ரேஷன்கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் 5 புகைப்படங்களை எடுத்து வர வேண்டும் .இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் ஆட்சியா ளர் தெரிவித்துள்ளார்.