districts

img

சமையல் எரிவாயு விலை உயர்வு மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை, செப்.3–

சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கோவையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வெள்ளி யன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு அதிகாரத்திற்கு வந்த நாள் முதல் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உயர்த்துவது என்பதை கொள்கை முடிவாக கொண்டிருக்கிறது. இது போதாதென்று அனைத்து தரப்பி னரையும் பாதிக்கும் வகையில் பெட் ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை களை தொடர்ந்து ஏற்றி வருகிறது.

தற்போது மீண்டும் கேஸ் விலையை உயர்த்தி பேரிடியை நிகழ்த்தி உள்ளது.  தற்போது மானிய விலையில் வழங்கப் படும் எரிவாயு உருளையின் விலை ஆயிரம் ரூபாயை தொட்டுள்ளது. கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் கார ணமாக ஏற்கனவே வேலை இழப்பு, ஊதியம் இழப்பு என்கிற நிலையில் மக் கள் கடும் துன்பத்திற்கு ஆளாகியுள்ள னர். இந்நிலையில் ஒன்றிய அரசின் இந்த கேஸ் விலை உயர்வால் தொடர் தாக்கு தலுக்கு பொதுமக்கள் உள்ளாகியுள்ள னர். 

இந்த விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகி றது. இதன் ஒருபகுதியாக கோவையில் பல்வேறு பகுதிகளில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை தெற்கு சட்டமன்ற தொகு திக்குட்பட்ட காமராஜபுரம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங் கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் சுதா, கிழக்கு நகர தலைவர் வனஜா நடரா ஜன் மற்றும் மல்லிகா உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர்.

இதேபோன்று மேட்டுப்பாளையம் பகுதியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத் தின் மாநிலக்குழு உறுப்பினர் ராஜ லட்சுமி, மேட்டுபாளையம் தாலுகா தலைவர் மெகபுனிசா உள்ளிட்ட ஏராள மான பெண்கள் பங்கேற்று கேஸ் விலை  உயர்வுக்கு காரணமான ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

;