தருமபுரி, மார்ச் 9- புதுச்சேரில் 5 வயது சிறுமி பாலியல் வன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தருமபுரியில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். புதுச்சேரில் சிறுமி பாலியல் வன்கொலைக்கு காரணமான போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும். போதைப் பொருள் புழக்கத்திற்க்கு காரணமான பாஜக கூட்டணி புதுச்சேரி முதல்வர், பதவியை ராஜி னாமா செய்ய வேண்டும். இக்கொடூர சம்ப வத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தரும புரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ஜெயா தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் ஆர்.மல்லிகா, மாவட்ட துணைத்தலைவர் கே.பூபதி, நகரச் செயலாளர் நிர்மலா ராணி, ஒன்றியத் தலை வர் தமிழ்மணி, ஒன்றியச் செயலாளர் எம்.மீனாட்சி, நிர்வாகிகள் கிருஷ்ணவேணி, ரங்க நாயகி, சுசீலா, உஷா, கற்பகம், இளவரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.