மேட்டுப்பாளையம், ஆக.18- பவானி ஆற்றங்கரையில் கொட்டப் படும் கழிவுகளை சாப்பிடும் கால்நடை கள் உயிரிந்து வரும் சம்பவம் உரிமை யாளர்களை வேதனையில் ஆழ்த்தியுள் ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யத்தில் உள்ள பவானி ஆற்றங்கரை யோர பகுதியில் அமைந்துள்ளது சமய புரம். இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற னர். இப்பகுதியைச் சேர்ந்த பூவாத்தாள் என்பவர் தனது வீட்டில் 10 மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வரு கிறார். இந்நிலையில், மேய்ச்சலுக்கு சென்ற இவரது மாடுகளில் பசு மாடு ஒன்று வயிறு வீங்கி திடீரென துடி துடித்து உயிரிந்தது. மேலும், சில மாடுக ளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பூவாத்தாளின் மாடுகள் சமயபுரம் பகு தியைச் ஒட்டியுள்ள பவானி ஆற்றங் கரையில் கொட்டப்பட்டிருந்த கழிவு களை சாப்பிட்டதாக தெரிகிறது. மேட்டுப்பாளையத்தில் செயல் பட்டு வரும் கிழங்கு மண்டிகளில் வீணாகி அழுகி விடும் உருளைக்கிழங்குகளை நைலான் மற்றும் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து மூட்டை மூட்டையாக கட்டப் படும். இதன்பின் டெம்போ போன்ற வாக னங்களில் ஏற்றப்பட்டு கொண்டு செல் லப்படும் இக்கழிவுகள், சமயபுரம் பகு தியில் உள்ள பவானி ஆற்றங்கரை யோர பகுதியில் கொட்டப்பட்டு வருகி றது. அழுகிய கிழங்கின் வாசத்தால் ஈர்க் கப்படும் இப்பகுதியில் மேய்சலுக்கு வரும் கால்நடைகள் அங்கு கொட்டி கிடக்கும் கிழங்குளோடு சேர்த்து, அதனை எடுத்து வர பயன்படும் பிளாஸ் டிக், நைலான் மற்றும் சணல் பைகளின் கழிவுகளையும் சேர்த்து உண்டு விடு கின்றன. இதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு வயிறு வீங்கி மாடுகள் உயிரி ழப்பதாக குற்றஞ்சாட்டும் இப்பகுதி மக் கள், ஏற்கனவே பல கால்நடைகள் இத னால் உயிரிந்துள்ளதாக வேதனை தெரி விக்கின்றனர். மேலும், இதனால் இயற்கை வளம் மிக்க இப்பகுதி முழுவதும் டன் கணக் கில் கொட்டப்படும் அழுகிய காய்கறி கழிவுகளால் துர்நாற்றம் வீசி கடும் சுகா தார சீர்கேடு நிலவி வருகிறது. வனத்தை ஒட்டியுள்ள இப்பகுதி பவானி ஆற்றங் கரையோரம் கால்நடைகள் மட்டு மின்றி, யானைகள் உள்ளிட்ட வன உயிரி னங்களும் நீர் அருந்த வருவதால் இவ் விடத்தில் கழிவுகளை கொட்டுவதை மாவட்ட நிர்வாகம் தடை செய்ய வேண் டும். வனத்துறையும் இதில் கவனம் செலுத்துவது அவசியம் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.