புதுதில்லி, மே 23-தேர்தல் முடிவுகளை அடுத்து, மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தைப் பாதுகாத்திடவும், எதிர்காலத்தில் ஏற்பட்டுள்ள சவால்களை ஒன்றிணைந்து எதிர்த்திடவும் மக்கள் முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.தேர்தல் முடிவுகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:இந்திய வாக்காளர்கள் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு தீர்மானகரமான வெற்றியைத் தந்திருக்கிறார்கள்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இத் தேர்தலில் ஒரு கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதற்கான காரணங்களை ஆராய்ந்து, எதிர்காலத்திற்கான முறையான படிப்பினைகளை வரையறுத்திடுவோம்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தன்னுடைய வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.அரசியல் தலைமைக்குழு, இத்தேர்தலில் கட்சியின் செய்தியை மக்களிடம் எடுத்துச் சென்ற ஊழியர்கள் அனைவருக்கும் தன் வணக்கங்களை செலுத்திக்கொள்கிறது.நம் நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசைப் பாதுகாப்பது தொடர்பாகவும், அரசமைப்புச்சட்டத்தின் கீழ் இயங்கிடும் அமைப்புகளைப் பாதுகாப்பது தொடர்பாகவும், மக்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சனைகளைப் பாதுகாப்பது தொடர்பாகவும் மிகவும் பெரிய அளவில் சவால்கள், நம் முன் இருக்கின்றன.அரசியல் தலைமைக்குழு, மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தைப் பாதுகாத்திட, எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை ஒன்றுபட்டுப் போராடி முறியடித்திட முன்வர வேண்டும் என்று மக்களை அறைகூவி அழைக்கிறது.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.(ந.நி.)