தருமபுரி, நவ.10- தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலு வலக கூடுதல் கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, மனுக்கள் குழு ஆய்வுக்கூட்டம் வியாழனன்று நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை மனுக்கள் குழுவின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினரு மான கோவி.செழியன் தலைமை வகித் தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, மனுக்கள் குழு உறுப்பினர்களுமான சட்டமன்ற உறுப்பினர்கள் டி.கே.அமுல்கந்தசாமி, மு.பெ.கிரி, ஆ. கோவிந்தசாமி, எஸ்.சந்திரன், கோ. செந்தில்குமார், எம்.வி.பிரபாகரராஜா, தே.மதியழகன், சா.மாங்குடி ஆகி யோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வரவேற்புரையாற்றினார். தருமபுரி மாவட்டத்திலிருந்து ஏற் கனவே வரப்பெற்ற 108 மனுக்களில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை குழு வினர் மூலம் தேர்வு செய்யப்பட்ட 78 மனுக்கள் மற்றும் கடந்த 2018-2019ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்ட மன்ற பேரவையின் மனுக்கள் குழு மூலமாக பெறப்பட்ட 14 மனுக்கள் மீது மனுதாரர்கள் முன்னிலையில் ஒவ் வொரு மனுவாக ஆய்வு மேற்கொண் டார்கள். வருவாய்த்துறையின் சார்பில், 15 பயனாளிகளுக்கு ரூ.6,75,000 மதிப்பீட்டி லான 15 இலவச வீட்டுமனைப்பட்டாக் களை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, மனுக்கள் குழுவின் தலைவர் கோவி. செழியன் வழங்கினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் சட்ட மன்ற உறுப்பினர்கள் தருமபுரி எஸ்.பி. வெங்கட்டேஸ்வரன், அரூர் வே. சம்பத்குமார் உள்ளிட்ட பல்வேறு துறையை சார்ந்த அலுவலர்கள் பங் கேற்றனர்.