கோவை, மார்ச் 14- வழக்கறிஞர்களாக இல்லாதவர்கள், போலியாக வழக்கறிஞர் பயன்படுத்தும் ஸ்டிக்கர்களை வாகனத் தில் ஒட்டி உலா வருவதை தடுக்க, கோவை ஒருங்கி ணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்களின் வாகனங்களுக்கு க்யூஆர் கோடு அடங்கிய ஸ்டிக்கர்கள் வழங்கப்பட் டது. கோயமுத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், வழக்கறிஞர்களின் வாகனங்களுக்கு க்யூஆர் கோடு அடங்கிய ஸ்டிக்கர் வழங்கும் நிகழ்ச்சி, கோவை ஒருங் கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நீதிபதி சசிரேகா, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தால் வழக்கறிஞர்களின் சுய விவரங்கள் தெரிய வரும். இது குறித்து வழக்கறிஞர்கள் கூறுகையில், கடை களில் விற்கக்கூடிய வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை வாங்கி கொண்டு வழக்கறிஞர்களாக இல்லாதவர்களும் நீதி மன்ற வளாகத்திற்குள் வாகனங்களை நிறுத்தி விடுகின் றனர். இதனால், வழக்கறிஞர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு கடும் சிரமம் ஏற்படுகிறது. இதனை தடுப் பதற்கு காவல்துறையிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் இணைந்து இது போன்ற ஒரு நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன் மூலம் வழக்கறிஞர்களாக இல்லாதவர்கள் அவர்களின் வாகனங்களை நீதிமன்றத்திற்கு உள்ளேயோ அல்லது நீதிமன்றத்தை சுற்றியோ நிறுத்தி விட முடியாது என தெரிவித்தனர்.