நாமக்கல் மக்களவை தொகுதி கொமதேக வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ் வரன், சேலம் மாவட்டம், சங்ககிரி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகி றார். நாமக்கல் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் உதயசூரி யன் சின்னத்தில் போட்டியிடும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அதன்படி, அவர் நாமக்கல் நாடாளுமன்ற தொகு திக்குட்பட்ட சேலம் மாவட்டம், சங்ககிரி திமுக ஒன்றிய அலுவலகத்திலிருந்து பயணியர் விடுதி சாலை, சன்னியாசிப் பட்டி, வீராச்சிப்பாளையம், புள்ளா கவுண்டம்பட்டி, கல்வடங்கம், கிடை யூர், ஊஞ்சானூர் உள்ளிட்ட 68 இடங்க ளில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இந் நிகழ்வில் திமுக மேற்கு மாவட்ட அவைத் தலைவர் பி.தங்கமுத்து, ஒன்றியச் செய லாளர் கே.எம்.ராஜேஷ், நகரச் செயலா ளர் கே.எம்.முருகன், பேரூராட்சி துணைத் தலைவர் ஆர்.வி.அருண்பிரபு, காங்கி ரஸ் மேற்கு மாவட்டத் தலைவர் சி.எஸ். ஜெயக்குமார், நகரத் தலைவர் டி.எம்.காசிலிங்கம் உள்ளிட்ட பல்வேறு கூட் டணி கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்ற னர்.