திருப்பூர், ஏப்.5- திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள கண்ண புரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மாட்டுச் சந்தை கூடியது. ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டி விக்கிரம சோழீஸ்வரர் கோவில் தேரோட்டம், மாரி யம்மன் கோயில் பொங்கல் திருவிழாவும் கண்ணபுரத்தில் நடைபெறும். இதில் பழமை வாய்ந்த விக்கிரம சோழீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு,1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாட்டுச் சந்தை யும் நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டு களாக கொரோனா தொற்றின் காரணமாக மாட்டுச் சந்தை நடைபெறவில்லை. இரண்டு ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டு திருவிழா கடந்த வெள்ளியன்று துவங்கி யது. இதனை ஒட்டி கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் மாட்டுச் சந்தையும் கூடி யது. இந்த மாட்டு சந்தைக்கு தமிழகம் மட்டு மல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவ தோடு, வாங்கியும் செல்வார்கள். இந்த ஆண்டு கண்ணபுரம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.
16 ஆம் தேதி மாலை விக்கிரம சோழீஸ்வரர் கோயில் சித்ரா பவுர்ணமி தேரோட்டமும் நடைபெற உள்ளது. பத்தாம் நுற்றாண்டில் (1088) அபிமான சோழ ராசாதி ராசனால் விக்கிரம சோழீஸ் வரர் கோயில் கட்டப்பட்டு, வீர ராசேந்திர சோழனால் இக்கோயிலுக்கு கொடை வழங் கப்பட்டும், உழவர்கள், வணிகர்களுக்கு வரி விதிக்கப்பட்டு விக்கிரம சோழீஸ்வரர் கோயில் தைப்பூச விழாவும், தினப்பூசை களும், இதர திருவிழாவும் நடந்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. வர லாற்று சிறப்பு மிக்க இக்கோயிலில் ஆறு முகங்களுடன்காட்சி தரும் முருகன் சிலை உள்ளது சிறப்பாகும். மேலும் சேரர்களின் முசிறி (கேரளா) துறைமுகம் முதல் சோழர் களின் பூம்புகார் துறைமுகம் வரை செல்லும் பெருவழிப் பாதையில் அமைந்துள்ள இக் கோயிலின் மாட்டுச் சந்தை 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கொரோனாவுக்கு பின் இந்த ஆண்டு முன்னதாகவே மாட்டுச் சந்தை கூடத் தொடங்கி விட்டது.
இந்த மாட்டுச் சந்தைக்கு இதுவரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர் நாடகா ஆகிய பகுதியில் இருந்து 4 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த மாட்டுச்சந்தையில் விவ சாயிகள் நாட்டு மாடு, கன்று குட்டி, காளை களை வாங்கிச் செல்கிறார்கள். நாட்டு இன மாடுகளான காங்கயம், கிர், காங்கரேஜ் ஆகி யவை விற்பனைக்கு வந்துள்ளன. நாட்டு மாடுகளுக்கு என கடந்த 1000 ஆண்டுக ளாக நடைபெறும் ஒரே சந்தை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகள் கழித்து நடை பெற்று வரும் மாட்டுச் சந்தையை காண பொதுமக்கள் விவசாயிகள் பலரும் குடும் பமாக வந்து செல்கின்றனர். இங்கு இளங் கன்றுகள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், நாட்டு பசுமாடுகள் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையும், சோடி காளைகள் 80 ஆயிரம் முதல் 1.5 லட்சம் வரை யும், இன விருத்திக் காளைகள் 1 லட்சம் வரையும் விற்பனைக்கு வந்துள்ளன. இச்சத் தையை ஒட்டி கோயிலின் முன்பாக மாடுக ளுக்கான கயிறுகள், மணிகள், குஞ்சம், சாட்டை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் அமைக்கப்பட்டுள் ளன. இங்கு மாடு வாங்க வரும் உழவர்கள், மாடுகள் வாங்க முடியாவிட்டாலும், இங்கு வந்து செல்வதற்கு அடையாளமாக சாட் டையை வாங்கி செல்வது குறிப்பிடத்தக் கது.