திருப்பூர் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன், ஆப்பக்கூடல், அம்மாபேட்டை ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இதில் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம், ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ, சிபிஎம் தாலுகாச் செயலாளர் எஸ்.மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.