districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ரூ.7.76 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்

ரூ.7.76 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் நாமக்கல், ஏப்.8- ராசிபுரம் அருகே ரூ.7.76 கோடி மதிப்பிலான தங்கம்,  வெள்ளி நகைகளை பறக்கும்படை அதிகாரிகள் பறிமு தல் செய்தனர். நாமக்கல் மாவட்ட எல்லைப் பகுதியான ராசிபுரத்தை அடுத்துள்ள மல்லூர் சோதனைச்சாவடியில், ராசிபுரம் பகுதி  தேர்தல் அலுவலர் சீனிவாசன் தலைமையில் அதிகாரிகள் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து மதுரையை நோக்கிச் சென்ற தனியார் கூரி யர் சேவை வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற் கொண்டனர். இந்த சோதனையில் ரூ.7.76 கோடி மதிப்பி லான 10 கிலோ தங்கம், 29 கிலோ வெள்ளி நகைகள் இருப் பது தெரியவந்தது. இதையடுத்து தங்கம், வெள்ளி நகை களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை ராசிபுரம் வட் டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். இந்த  நகைகளைக் கடைகளுக்கு ஆர்டரின் பேரில் கொண்டு செல்வ தாகக் கூறப்படுகிறது. இருப்பினும் பறிமுதல் செய்யப்பட்ட  நகைகள் குறித்து வருமான வரித்துறையினா் சரிப்பார் பிற்கு பிறகு, அளவீடு மற்றும் ஆவணங்கள் குறித்து  விசாரணை மேற்கொண்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்ப டும் எனத்தெரிகிறது. தற்போது பறிமுதல் செய்யப்பட்ட நகை கள் ராசிபுரம் கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட தாக பறக்கும் படை அலுவலர்கள் தெரிவித்தனர்.

797 பட்டு சேலைகள் பறிமுதல்

797 பட்டு சேலைகள் பறிமுதல் சேலம், ஏப்.8- ஓமலூர் அருகே சிக்கம்பட்டி, தொளசம்பட்டி ஆகிய இடங்களில் ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்ற 797 புட வைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள தொளசம் பட்டி பகுதியில், பறக்கும் படை அலுவலர் ராணி தலைமை யிலான குழுவினர், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காமலாபுரம் பகுதியிலிருந்து நங்கவள்ளிக்கு சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், விலை  உயர்ந்த 139 பட்டு சேலைகள் இருந்தது. விசாரணையில், காம லாபுரத்தில் கைத்தறியில் நெய்த பட்டு சேலைகளை, நங்க வள்ளியில் உள்ள கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால், ரூ.5 லட்சம் மதிப்புள்ள 139 பட்டு சேலைகள் பறி முதல் செய்யப்பட்டு, ஓமலூர் உதவி தேர்தல் நடத்தும் அலு வலர் லட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல, ஓம லூர் அருகே சிக்கம்பட்டி கிராமத்தில் பறக்கும் படை அலு வலர் வடிவேல் தலைமையிலான குழுவினர், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சேலத்தில் இருந்து ஜல கண்டாபுரம் பகுதிக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள 658 கோரப் பட்டு சேலைகளை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய் தனர்.

200 கி.மீட்டருக்கு அப்பால் தேர்தல் பணி ஆசிரியர்கள் அதிருப்தி

தருமபுரி, ஏப்.8- தேர்தல் பணியில் ஈடுபடும் பாலமலை ஆசிரியர்களுக்கு 200 கி.மீ. தொலைவில் உள்ள மையங்களில் தேர்தல் பணி ஒதுக்கப் பட்டுள்ளதால் ஆசிரியர்கள் அதிருப்திய டைந்துள்ளனர். தருமபுரி மக்களவை தொகுதியில் உள்ள  பாலமலை ஆசிரியர்களுக்கு கள்ளக்கு றிச்சி மக்களவை தொகுதிக்குட்பட்ட கெங்க வல்லி, சேந்தமங்கலம் போன்ற பகுதிகளில் தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது. இது  சுமார் 200 கி.மீ. தொலைவு இருப்பதால், ஞாயி றன்று நடைபெற்ற பயிற்சிக்குச் செல்ல அதி காலை 4 மணிக்கு புறப்பட்ட ஆசிரியர்கள் வீடு திரும்ப இரவு 8 மணியானதாக கவலை தெரிவித்தனர். தங்களுக்கு சொந்தத் தொகு தியில் பணி வழங்காவிட்டாலும் அருகி லுள்ள தொகுதிகளில் பணி வழங்க லாம். அதை விடுத்து நீண்ட தூரம் பய ணம் செய்வது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி யுள்ளது. வாக்குப் பதிவின்போது இர வில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத் துச்சென்ற பிறகு ஊருக்குத் திரும்பிவர போதிய பேருந்து வசதி இல்லை. இதனால் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகிறோம் என்று  ஆசிரியர்கள் தெரிவித்தனர். கடந்த உள் ளாட்சித் தேர்தலின்போது அந்தந்தப் பகுதிக ளிலேயே பணி ஆணை வழங்கப்பட்டது. அது போல தற்போது அருகில் உள்ள தொகுதி களில் பணி ஆணை வழங்க வேண்டும் என்று  ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள் ளனர்.
 

பண முறைகேடு: முன்னாள் பிடிஓ மீது வழக்கு

சேலம், ஏப்.8- சேலம் பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் ரூ.21 லட்சம் முறைகேடு செய்த முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது மாவட்ட குற் றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு, அவரை  தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் கிராம ஊராட்சிகளுக்கான வட்டார வளர்ச்சி அலுவலராக பணி யாற்றி வருபவர் சிராஜூதீன் (60). இவர்,  சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலை யத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ராஜா என்பவர், நிலவாரப்பட்டி ஊராட்சி யில் 42 மனைப்பிரிவுகளை வரன்மு றைப்படுத்த அலுவலகத்திற்கு தொடர்பின்றி தன்னிச்சையாக அனுமதி வழங்கியுள்ளார். அதன்மூலம் அரசு கணக்கில் வரவு வைக்க  வேண்டிய ரூ.21 லட்சத்தை வசூல் செய்து  கருவூலத்தில் செலுத்தாமல் நிதி முறை கேட்டில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி யிருந்தார். இப்புகார் பற்றி துணை காவல்  கண்காணிப்பாளர் முனியசாமி தலைமை யிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ராஜா முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து, ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.

வாகனத் தணிக்கை தீவிரம்

வாகனத் தணிக்கை தீவிரம் நாமக்கல், ஏப்.8- பள்ளிபாளையம் காவல் நிலைய எல்லை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் வாகனத் தணிக்கை செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள் ளது. மேலும், பல்வேறு இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, போலீசார் மற்றும் பறக்கும் படை  அதிகாரிகள் மூலமாக கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்ட எல்லை பகுதி யாக உள்ள ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் சாலையாக பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப்பாலம் உள்ளது. மேலும், காவிரி கரையோரத்தில் ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட கருங் கல்பாளையம் என்ற பகுதியில் சோதனைச்சாவடி அமைக் கப்பட்டு, தொடர்ந்து இரவு பகலாக வாகனச் சோதனை நடை பெற்று வருகிறது. இந்நிலையில், ஈரோட்டிலிருந்து பள்ளி பாளையம் வரும் வாகனங்களை சோதனை செய்வதற்காக பள்ளிபாளையம் பழைய பாலம் அருகே தற்காலிக தேர்தல்  சோதனைச்சாவடி அமைக்கப்பட்ட நிலையில், உள்ளூர் போலீசார் மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் 24  மணி நேரமும் தீவிரமாக வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வரு கின்றனர். வெளிமாவட்டங்களில் இருந்து வரும் கார்  உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து, விவரங் கள் கேட்டறிந்து அதன்பிறகு அனுப்பி விடுகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பணம் அல்லது பரிசு பொருட்கள் ஏதேனும் கொண்டு செல்லப்படுகிறதா? என தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்படும் என அதி காரிகள் தெரிவித்தனர்.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்  வீட்டில் கொள்ளை!

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்  வீட்டில் கொள்ளை! கோவை, ஏப்.8- கோவையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 58 பவுன்  தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளை அடித்து சென்ற  மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  கோவை சின்னியம்பாளையம் தொட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி. ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர்  வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் காங்கயத்தில்  உள்ள ஒரு கோயிலுக்கு சென்றனர். பின்னர் இரவு வீடு  திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப் பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது உடைமை கள் அனைத்தும் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 58  பவுன் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போனது  கண்டு அதிர்ர்ச்சி அடைந்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 30 லட்சம் இருக்கும். வீட்டில் யாரும் இல்லாததை நோட் டமிட்டு மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்று உள்ளனர்.  இது குறித்து குமாரசாமி பீளமேடு போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்குப் பதிவு  செய்த போலீசார், கைரேகை நிபுணர்களுடன் சென்று சம்பவ  இடத்தில் சோதனை செய்தனர். வீட்டு கதவு மற்றும் பீரோவில்  பதிவாகி இருந்த கைரேகை பதிவுகளை சேகரித்தனர். மேலும்  அங்கு இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

94 சதவீதம் தபால் வாக்குகள் பதிவு

ஈரோடு, ஏப்.8-  ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் 94.74 சதவீதம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது. ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம், காங்க யம், குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட 21, 805 வாக்காளர்களும், 9,824  மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர். இதில், தபால் வாக்களிக்க 2,201 முதியோர்களும், 800 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 3,001 பேர் விருப்பம் தெரி வித்து, முதல் நாளான கடந்த 4 ஆம் தேதியன்று ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி நீங்கலாக மற்ற 5 தொகுதிகளிலும் 775  முதியோர்களும், 191 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 966 பேர் தபால் வாக்கினை பதிவு செய்தனர். 2 ஆவது நாளான வெள்ளியன்று 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 1,051  முதியோர்கள், 439 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 1, 490 பேரிடமும், கடைசி நாளான சனியன்று ஈரோடு கிழக்கு  மற்றும் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி நீங்கலாக மீதமுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 257 முதியோர், 130 மாற்றுத்திறனாளிகள் என 387 பேர் தங்களது தபால் வாக்கினை பதிவு செய்தனர். தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்த 3,001 பேரில், கடந்த 3 நாட்களிலும் மொத்தம் 2,083 முதியோர்கள், 760 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என  மொத்தம் 2,843 பேரிடம் அதாவது 94.74 சதவீதம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது.

பொருட்காட்சி நடத்த குட்டை திடல் ஏலம்''

உடுமலை, ஏப்.8- உடுமலை மாரியம்மன் தேர் திருவிழாவை ஒட்டி, குட்டை திடலில் பொருட்காட்சி மற்றும் பொழுதுபோக்கு அரங்கம் அமைக்க பொது ஏல முறை அறிவிக்கப்பட்டுள்ளது. உடுமலை மாரியம்மன் தேர் திருவிழா வருகிற 9 ஆம் தேதி, துவங்க உள்ள நிலையில், திருவிழாவிற்கு வரும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பொருட்காட்சிகள் மற்றும் பொழுதுபோக்கு அரங்கம், குட்டை திடலில் நடப்பது  வழக்கம். இந்த இடத்தில் பொது மக்கள் பயன்படுத்தும் வகை யில் உணவு கூடம், ராட்டிணங்கள் மற்றும் சர்க்கஸ் என பல  பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்நிலையில், வருவாய்த்துறையின் சார்பில் அதற்கான  பொது ஏல முறை, 12 ஆம் தேதி உடுமலை வட்டாச்சியர் அலுவகத்தில் நடைபெறும் என அறிவித்துள்ளது. மேலும், இந்த ஏலத்தின் குறைந்த பட்ச ஏலத்தொகையாக ரூ.71 லட்சத்து 94 ஆயிரமாக தீர்மானிக்கபட்டு உள்ளதாகவும், ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் ரூ.17 லட்சத்து 98 ஆயி ரத்து ஐநூறு ரூபாய்க்கு வரைவோலை எடுத்து, வட்டாச்சி யர் அலுவலகத்தில் 12 ஆம் தேதி காலை 11 மணிக்குள்  விண்ணப்பம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சியில் நியாமான விலை  நிர்ணயம் செய்ய வேண்டும். உணவு அரங்கில் கெட்டுப் போன உணவுகள் விற்பனையை தடுத்து, தரமான உணவுகள்  விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு  அதிகாரிகள் பொருட்காட்சி நடக்கும் இடத்தில் ஆய்வுகளை  மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை - ஒருவர் கைது

கோவை, ஏப்.8- கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த வர் கருப்பசாமி. இவர் அப்பகுதியில் டீ-கடை  நடத்தி வருகிறார். இவரது கடையின் எதிரே  46 வயது பெண் ஒருவர் பெட்டிக் கடை நடத்தி  வருகிறார். இந்நிலையில், சில நாட்களுக்கு  முன்பு கருப்பசாமி அந்த பெண் மற்றும் அவ ரது குடும்பத்தினருடன் செல்பி எடுத்துள் ளார். அந்த செல்பி போட்டோவை காட்டி, அப்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.  மேலும்,  தொடர்ந்து, கருப் பசாமி அப்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு,  தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனை பொறுக்க முடியாத அப்பெண் வட வள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த  போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்பு  சட்டத்தின் கீழ் கருப்பசாமியை கைது செய்த னர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் நேர்நி றுத்தி சிறையில் அடைத்தனர்.

தமிழ்நாட்டில் பாஜக துடைத்தெறியப்படும் வாரிய சங்கத் தலைவர் பொன்.குமார் பேட்டி

கோவை, ஏப்.8- இந்த தேர்தலோடு தமிழ்நாட்டிலிருந்து பாஜக துடைத்தெறியப்படும் என வாரிய  சங்கத் தலைவர் பொன்.குமார் கோவை யில் பேசினார். இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர்  கணபதி ராஜ்குமாரை ஆதரித்து வாரிய  சங்கத் தலைவர் பொன்.குமார், கோவை யின் பகுதிகளில் உள்ள அமைப்புசார தொழி லாளிகளை சந்தித்து வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார். அப்போது, செய்தியாளர்களி டம் பேசிய அவர், சர்வதிகாரத்தை, ஜன நாயகத்தை மீட்டு இந்தியாவை காப்பதற் கான இரண்டாவது சுதந்திரப் போர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில், சர்வாதிகார உச்சமாக இருக்கக்கூடிய பாஜக தலைமையிலான கூட்டணி, மோடி  தலைமையிலான அரசை அகற்றி, ஜனநா யக தலைமையிலான ஒரு அரசை ஒன்றியத் தில் அமைத்தால் தான், மாநில உரிமைகள் நிலைநாட்டப்படும். இந்த தொகுதியில் போட்டியிடக் கூடிய பாஜக எதை சொன்னாலும் மக்கள் நம்ப தயாராகவில்லை. இவர்களுக்கு  ஒரு ஓட்டு வங்கியும் கிடையாது. பாஜக டெபாசிட் வாங்குவதே கடினம். அதிகாரத்தையும், வாயையும் வைத்துக்கொண்டு வடை சுட நினைக்கிறார்கள். அது ஒரு நாளும் நடக்காது.  நாற்பது தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான இந்தியா கூட்டணி பெரும்.  அண்ணாமலை டெபாசிட் இழப்பார். பாஜ கவில், உள்ள 276 பேரின் மீது 360க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. நாளை ஒன்றி யத்தில் பாஜக அரசு இல்லை என்றால், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாவில் இருக் கிறவர்களில் 60 விழுக்காடு பேர் காணா மல் போய்விடுவார்கள். ஆகவே இவர் களை வைத்துக்கொண்டு வாக்குகளை பெற லாம் என்று நினைத்தால் அது ஒரு காலும்  நடக்காது. இந்த தேர்தலோடு தமிழ்நாட் டிலிருந்து பாஜக துடைத்தெறியப்படும் என் றார்.

தீவிர சோதனை

உதகை,ஏப். 8- வாகனங்களை தேர்தல் தனிப்படை அமைத்து வெடி குண்டு கண்டறியும் கருவி மூலம் தீவிர சோதனை மேற் கொண்டு வருகின்றனர். வருகின்ற ஏப். 19 ஆம் தேதியன்று தமிழ்நாடு மற்றும்  புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் அறிவு றுத்தலின் படி தேர்தல் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிக ளில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை கருத்தில்  கொண்டு பொது இடங்கள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள், சந்தேகத்துக்குரிய நபர்கள், அதிகம் மக்கள் கூடும் இடங்கள் மற்றும் உள்ளூர், வெளியூர் வாகனங்களை தேர்தல்  தனிப்படை அமைத்து வெடிகுண்டு கண்டறியும் கருவி மூலம்  தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கார் மோதி 3 பேர் படுகாயம்

கோவை, ஏப்.8- கோவை விளாங்குறிச்சி தனியார் பள்ளி  அருகே கல்லூரி மாணவர்கள் 6 பேர் ஒரு  காரில் சென்றனர். காரை அதிவேகமாகவும், தாறுமாறாகவும் ஓட்டு சென்றதால் சாலை  ஓரத்தில் தள்ளுவண்டி கடையில் உணவு சாப்பிட்டவர்கள் மீது கார் மோதியதில் சாலையோர கடையில் உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்த 3 பேர் படுகாயம் அடைந்த னர். அவர்களை சிகிச்சைக்காக கோவை  அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல் லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து வந்த போக்குவரத்து போலீசார், விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.