districts

சாதியைச் சொல்லி தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு சிறை

திருப்பூர், ஜன. 6- திருப்பூர் அருகே பொங்குபாளையம் ஊராட்சி காளம்பாளையத்தில் பக்கத்து வீட் டில் வசித்த அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த வரை சாதியைச் சொல்லி இழிவாகத் திட்டி, தாக்குதல் நடத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு ஆறு மாத சிறை தண் டனை விதிக்கப்பட்டது. இது பற்றிய விபரம் வருமாறு: திருப்பூர்  பொங்குபாளையம் ஊராட்சி காளம்பாளை யம் ஸ்ரீ சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் மோகன் ராஜ் (47). இவரது மனைவி ஜோதிமணி (41).  இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மோகன்ராஜ் மாமியார் புஷ்பா இவர்களு டன் வசித்து வருகிறார். அதேபகுதியில் இவர் கள் வசிக்கும் வீட்டுக்கு எதிரில் வசந்தாமணி  (57), பூங்கொடி (52) என்ற சகோதரிகள் குடும் பத்தார் வசித்து வந்தனர். மோகன்ராஜ் வீட்டுக்கு அருகில் இருக் கும் காலி இடத்தில் வசந்தாமணி குடும்பத் தார் வீடு கட்டும் வேலைக்காக கொண்டு வந்த  மணல், ஓடு உள்ளிட்ட கட்டுமானப் பொருட் களை கொட்டி வைத்திருந்தனர். இதனால் மோகன்ராஜ் தங்கள் வீட்டுக்கு விஷப்பூச்சி உள்ளிட்டவை வரும் என்பதால் அவற்றை வேறு இடத்தில் மாற்றி வைக்கும்படி கூறியி ருக்கிறார். தாழ்த்தப்பட்ட பட்டியல் சாதியைச்  சேர்ந்த மோகன்ராஜ்  தங்களிடம் இதைக் கூறு வதா என்று வசந்தாமணி குடும்பத்தார் ஆத்தி ரமடைந்தனர். இதனால் கடந்த 2021ஆம் ஆண்டு மே 31ஆம் தேதியன்று வசந்தாமணி,  பூங்கொடி, வசந்தாமணியின் மகன் கோபால்,  பூங்கொடியின் மகன்கள் சுரேஷ்குமார் (32),  ரமேஷ் (28)  உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர்  மோகன்ராஜ் வீட்டுக்கு முன்பாக வந்து அவரை சாதியைச் சொல்லி இழிவான வார்த் தைகளால் திட்டி வெளியே வரும்படி கூறினர்.  

வீட்டு வாசல் அருகே மோகன்ராஜ் வந்த போது, அவரை அடித்து உதைத்து, கற்களால்  தாக்கினர். இதில் தலையில் காயமடைந்த  மோகன்ராஜ் நினைவிழந்து விழுந்து விட்டார். அத்துடன் இச்சம்பவத்தை தடுக்கப்  போன அவரது மாமியார் புஷ்பாவையும் அந்த கும்பல் கடுமையாக தாக்கியது. உடன டியாக இருவரும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று பின்  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இந்த சம்பவம் குறித்து ஜோதிமணி கொடுத்த புகாரின் அடிப்படையில் பெரு மாநல்லூர் காவல் துறையினர் வன்கொ டுமை தடுப்புச் சட்டம், கும்பல் சேர்ந்து கலவ ரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில்  வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு  திருப்பூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மேலும்  மோகன்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பித்து கேட்டுக் கொண்ட அடிப்ப டையில் சிறப்பு அரசு வழக்கறிஞராக வை. ஆனந்தன் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் கடந்த 4ஆம் தேதி  வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். இதில் கோபால், சுரேஷ்குமார், ரமேஷ், வசந்தா மணி மற்றும் பூங்கொடி ஆகியோர் மீதான குற் றம் நிரூபிக்கப்பட்டு அனைவருக்கும் தலா  ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 1000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.