districts

img

இலவச வீட்டுமனை கேட்டு மனு

ஈரோடு, மார்ச் 4- சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் தலைமையில் இஸ் லாமிய பெண்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு ஈரோடு  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஈரோடு மாவட்ட, ஆட்சியர் அலுவலகத்தில் வராந்திர மக் கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. அதில் அந்தியூரில் இருந்து 56 இஸ்லாமிய குடும்பத் தலைவிகள் இம்முகாமில் பங்கேற்று இலவச வீட்டு மனைப் பட்டா கொடுக்க வேண் டும் என்ற விண்ணப்பத்தோடு அலுவலர்களை சந்தித்தனர். அந்த மனுவை மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட சிறு பான்மை துறை நல அலுவலர் தர்மராஜ் உள்ளிட்டோர் பெற்ற னர். பின்பு பதிலளித்த மாவட்ட சிறுபான்மை துறை அலுவ லர் தர்மராஜ், “வீட்டுமனைப் பட்டா உறுதியாக வழங்குகி றோம். யாரிடமாவது பூமி விற்பனைக்கு இருந்தாலும் நீங்கள்  சொல்லுங்கள். அரசாங்கம் விலை கொடுத்து வாங்கி வீட்டு மனை தருகிறோம்” என்று உறுதி அளித்தார். இம்மனு அளிக்கையில், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள்  நலக்குழுவின் மாவட்டத் தலைவர் அல்ஹாஜ் கே.எஸ்.இஸா ரத்தலி, மாவட்டச் செயலாளர் ப.மாரிமுத்து, பொருளாளர் கே. நடராஜன், மாவட்ட உதவித் தலைவர்கள் டி.சுப்பிரமணி மற் றும் ஏ.அப்துல் பாஷித், உதவிச் செயலாளர் எஸ்.ஸ்டாலின்,  ஐசிஓ அறக்கட்டளை தலைவர் ஜனாப் எம்.முகமது நாசர் அலி,  மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டப் பொருளாளர் வீ.ராஜு,  மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.ரேணுகா, சொங்கப்பன் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.