districts

சம்பிரதாயத்துக்கு நடத்தப்படுகிறதா மாணவர் கல்விக்கடன் முகாம்?

திருப்பூர், நவ. 24 – திருப்பூர் மாவட்டத்தில் மாண வர்களுக்கு கல்விக்கடன் தரப்படு கிறது என்று காட்டிக் கொள்வதற்காக சம்பிரதாயத்துக்கு கல்விக்கடன் முகாம் நடத்தப்பட்டுள்ளது என்று  மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள் ளனர். திருப்பூர் மாவட்டத்தில் கல்லூரி  மாணவர்கள் பயன்பெறும் வகை யில் கல்விக்கடன் சிறப்பு முகாம்  மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கி ழமை நடத்தப்பட்டது. இதில் திருப் பூர் மாவட்டம் முழுவதும் உள்ள பல் வேறு பகுதிகளில் இருந்து கல்விக்  கடன் பெற முகாமில் பெற்றோர்க ளுடன் மாணவர்கள் பங்கேற்றனர்.  மாவட்ட முன்னோடி வங்கி என்ற முறையில் கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி, இந்தி யன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட  22 வங்கிகள் இதில் கலந்து கொண்ட னர்.  மொத்தம் 300க்கு மேற்பட்ட மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் ரூ.64 கோடி அளவில்  1500-க்கும் மேற்பட்ட மாணவர்க ளுக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டுள் ளது. கல்விக்கடன் முகாமில் பெறப் பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரீசிலக்கப்பட்டு விரைந்து கல்விக் கடன் வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த முகாம் பற்றி மாண வர்களிடம் விசாரித்தபோது, மாவட்ட  நிர்வாகம் கல்விக் கடன் சிறப்பு முகாம் நடத்துவது குறித்த விபரமே  எங்களுக்குத் தெரியாது என்று கூறி னர். அத்துடன் தங்கள் பகுதியில் உள்ள வங்கிகளுக்கு நடையாய் நடந் தும் அவர்கள் கல்விக் கடன் தராமல் இழுத்தடிக்கின்றனர் என்றும் அவர் கள் கூறினர். மாணவர்களின் பெற் றோரும் அவர்களுடன் சேர்ந்து வங்கி களுக்குச் சென்று கல்விக் கடனுக் காக முயற்சி செய்தபோதும், அவர் கள் உரிய பதில் சொல்லாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் மாணவர் களுக்கு கல்விக்கடன் தருவது ஒப் பீட்டளவில் மிகக் குறைவாக உள் ளது. அருகாமை மாவட்டங்களை ஒப் பிடும்போது மிக மிகக் குறைந்த அளவே இங்கு கல்விக்கடன் தரப்பட் டுள்ளது. அருகாமையில் இருக்கும் கோவை மாவட்டத்தில் ரூ.300 கோடிக்கு மேல் கல்விக்கடன் தரப் பட்டுள்ளது. ஆனால் திருப்பூர்  மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக் கும் கணக்குப்படி ரூ.64 கோடி என்பது  கோவை மாவட்டத்துடன் ஒப்பிட் டால் சுமார் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே  ஆகும். மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்  கூட்டங்களில் பல சமயம் விவசாயி கள் இது குறித்து கேள்வி எழுப்பி யுள்ளனர். கல்விக்கடன் தராமல் அலைக்கழிப்பதாக புகார் கூறியுள் ளனர். அண்மையில் உடுமலைபேட் டையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வங்கியை முற்றுகையிட்டு கல்விக்க டன் கோரி போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. இது தவிர, கடந்த ஆண்டு திருப் பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடை பெற்ற திஷா ஆய்வுக் கூட்டத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கல்விக் கடன் குறித்து பேசியிருக்கிறார். திருப்பூர்  மாவட்ட நிர்வாகம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க சிறப்பு ஏற் பாடு செய்ய வேண்டும் என்று வலியு றுத்தினார். அதையொட்டி ஒரு முறை  கல்விக்கடன் முகாம் நடத்தினர். அத் தோடு தொடர்ந்து நடத்தாமல் விட்டு விட்டனர்.

இந்த நிலையில் வியாழக்கிழமை நடத்திய கல்விக்கடன் முகாம் மாணவர்களுக்கான கல்விக் கடன்  என்று மட்டும் இல்லாமல், அரசின்  மானியத்துடன் கூடிய கடன் திட்டங்க ளான தாட்கோ, மாவட்ட தொழில் மையத்தின் கடன் திட்டங்கள், பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டங் கள் குறித்தும் வங்கிகள் முகாமை  பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத் தப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்விக் கடனுக்கான முக்கியத்துவத்தை மாவட்ட நிர்வாகம் பத்தோடு பதி னொன்றாக மாற்றியிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது என்று மாணவர்கள் கூறினர்.  கடந்த காலங்களில் இதே திருப்பூ ரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங் கம், இந்திய மாணவர் சங்கம்  இணைந்து நடத்திய போராட்டத்தின் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவ தும் அனைத்து பகுதிகளிலும் விரி வான தகவல் தெரிவித்து ஆயிரக் கணக்கானவர்கள் பங்கேற்று கல் விக்கடன் வழங்கப்பட்ட வரலாறு உள்ளது. குறிப்பாக திருப்பூர் மாவட்டத் தொழில்கள் நலிவைச் சந்தித்து மக்கள் வாழ்வு நெருக்கடியில் சிக்கி யிருக்கும்போது அவர்களது வீட்டுப்  பிள்ளைகள் படிப்புக்கு கல்விக்கடன் மிகவும் அத்தியாவசியமானதாக உள்ளது. ஆனால் அத்தகைய அக் கறையுடன் இந்த முகாம் நடத்தப்ப டவில்லை. கணக்குக் காட்டுவதற் காக சம்பிரதாயமாக நடத்தப்பட்டதா கவே உள்ளது என்றும் விவசாயிகள்,  மாணவர்கள் கடுமையாக குற்றஞ் சாட்டினர். மாவட்ட நிர்வாகம் உண்மையி லேயே மாணவர்கள் பயனடையும் வகையில் விரிவாக விளம்பரம் செய்து திருப்பூரில் மட்டுமின்றி அனைத்து பிரதான ஊர்களிலும் மாணவர் கல்விக்கடன் சிறப்பு முகாம் களை நடத்த வேண்டும். மாணவர் களுக்கு எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் சட்டப்படி எளிதில் கல் விக்கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க் கின்றனர். மாவட்ட நிர்வாகம் கவ னம் செலுத்துமா?