districts

img

கோவை மாநகர போலீஸ் வாகனங்கள் ஆய்வு

கோவை, பிப்.26- கோவை மாநகர போலீசார் பயன்படுத்தும் பல்வேறு  வாகனங்களை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு செய்தார். கோவை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் போலீஸ் ரோந்து வாகனங்கள், ஜீப்கள், கலவர தடுப்பு வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்கள் அவ்வப்போது மாநகர காவல் ஆணையர் தலைமையில் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். அந்த வகையில், போலீசார் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. கோவை மாநகர காவல் ஆணைய பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், அனைத்து போலீஸ் வாகனங்களும் முறையாக இயங்குகின்றனவா? என்னென்ன பராமரிப்பு பணிகள் தேவை என்பன உள்ளிட்டவை பரிசோதனை செய்யப்பட்டன. அப்போது, கோளாறு இருக்கும் வாகனங்களை உடனடி யாக சரி செய்து, சம்மந்தப்பட்ட உதவி ஆணையரிடம் ஆய் வுக்கு உட்படுத்தி காட்ட, காவல் ஆணையர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது கோவை மாநகர காவல் துணை  ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.