districts

img

நீட் தேர்வில் பழங்குடியின மாணவி தேர்ச்சி

கோவை, நவ.3-  கோவையில் மலசர் பழங் குடியினர் சமுதாயத்தை சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அரசின்  உதவி கிடைத்தால் மருத்துவரா கும் கனவு நனவாகும் சூழல் உரு வாகியுள்ளது. கோவை திருமலையம் பாளை யம் பேரூராட்சிக்கு உட்பட்ட நஞ்சப் ்பணுர் பழங்குடியினர் கிராமத்தில் வசிப்பவர் மலசர் பழங்குடியைச் சேர்ந்த மாணவி சங்கவி. மருத்துவ ராக வேண்டும் லட்சியத்துடன் படித்து வந்த இவர் நீட் தேர்வை யும் எழுதியிருந்தார். இந்நிலை யில் அண்மையில் நீட் தேர்வு முடிவு கள் வெளியான நிலையில், கிராமத் தில் முதல் தலைமுறை மாணவி யாக சங்கவி தேர்ச்சி பெற்று சாதித் துள்ளார். மேலும், எவ்வித அடிப் படை வசதிகளும் இல்லாத இந்த கிராமத்தில் 12 வகுப்பு முடித்த முதல் மாணவியும் சங்கவி தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும். முன்னதாக, உயர் படிப்பிற் காக சாதி சான்றிதழ் வாங்க கடும்  போராட்டத்தில் ஈடுபட்டு அதில் தனது தந்தையும் இழந்து அந்த சான்றிதழை பெற்றார். சாதி சான்றி தழ் வாங்கும் போராட்டத்தில் ஈடு பட்ட நிலையில் அரசின் பார்வை யும், ஊடகத்தின் பார்வையாலும் அந்த கிராமத்திற்கு மின்சாரமும், தார் சாலைகளும் கிடைத்தன.

ஆனால், இன்னும் தங்களது குடிசை வீடுகளும், கிராமத்திற்கும் முறை யான வசதிகளும் கிடைக்காமல் இருக்கின்றன. அடிப்படை வசதிகள் மறுப்பு, வறுமை ஆகிய அனைத் தையும் எதிர்கொண்ட மாணவி சங்கவி, விடாமுயற்சியுடன் படித்து தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி  பெற்று சாதனை படைத்துள்ளார். இதனால் மலசர் பழங்குடி சமுதாயத் தில் முதல் மருத்துவராவதற்காக வாய்ப்பை சங்கவி பெற்றுள்ளார். இதுகுறித்து சங்கவி கூறுகை யில், 12ஆம் வகுப்பு முடிச்ச பிறகு பெரிய பயம் இருந்துச்சு. மருத்துவ ராக வேண்டும் என படித்து வந் தேன். ஆனால் நீட் தேர்வு குறித்த  புரிதல் இல்லை. 2018ம் ஆண்டு தேர்வு எழுதினேன். அப்போது 6 மார்க்கில் வாய்ப்பை தவறவிட் டேன். தொடர்ந்து 2 வது முறையாக  தேர்வு எழுதுவதற்கு கடினமாக படித்து வந்தேன். ஆனால் கொரோனா இரண்டாவது அலை, ஸ்மார்ட் போன் இல்லாத காரணத்தி னால் ஆன்லைன் வகுப்புகள் தொடர முடியவில்லை. அதற்குள் தேர்வின் பாடதிட்டங்களும் மாறி யிருந்தது. இதற்கிடையே, அம்மா விற்கு கண் அறுவை சிகிச்சை செய் திருந்த சூழல் வீட்டு வேலைகளை யும் பார்க்க வேண்டியாகிருந்தது. இருப்பினும் கையில் இருக்கும் புத் தகங்களை வைத்து நீட் தேர்விற்கு  படித்து தற்போது தேர்ச்சி பெற்றுள் ளேன் என்றார்.

;