கோவை, செப்.13- மக்கள் நலனில் சிறிதும் அக் கறையில்லாமல் தானடித்த மூப் பாக செயல்படும் ஒன்றிய அரசு, சட்டத்திற்கு பெயர் மாற்றிய விவ காரத்தில் பின் வாங்காவிட்டால் தொடர் போராட்டத்தை முன் னெடுக்க உள்ளதாக கோவையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தெரி வித்தனர். இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களை இந்தி யில் பெயர் மாற்றம் செய்ய கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒன்றிய பாஜக அரசு மசோதா தாக்கல் செய்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள வழக்கறி ஞர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் ஒன்றிய பாஜக அரசின் இந்த சட்ட திருத்த மசோதா வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக் கறிஞர்கள் பல்வேறு போராட் டங்களை முன்னெடுத்து வருகின் றனர். இதன் ஒரு பகுதியாக கோவை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கோவையில், 12 ஆம்தேதி முதல் நாளை 14ஆம் தேதி வரை 3 நாட் கள் நீதிமன்ற பணியில் இருந்து விலகி வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். 12 ஆம் தேதி கோவை ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாக நுழைவு வாயில் முன்பு திரண்ட வழக்கறி ஞர்கள் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய 3 சட்டங்களில் மேற்கொள் ளப்படும் திருத்தங்களை கண்டித் தும் அதன் மாற்றங்களை வட மொழியில் குறிப்பிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒன்றிய பாஜக அரசின் சட்ட திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக முழக் கங்களை எழுப்பினர். அதேபோல புதனன்று நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக வியாழனன்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து, கோவை வழக்க றிஞர்கள் சங்க தலைவர் கே.எம்.தண்டபாணி கூறுகையில், எந்த ஒரு சட்ட முன்வடிவை தாக்கல் செய் வதற்கு முன்பும், சட்ட வரைவு தயார் செய்யப்பட்டு பொதுமக்க ளிடையே கருத்து கேட்பு நடத்த வேண்டும். சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அவர் களது பரிந்துரையின் அடிப்படை யில் திருத்தங்கள் மேற்கொள் ளப்பட்ட பிறகே சட்ட முன்வடிவை நாடாளுமன்ற அவைகளில் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், ஒன்றிய அரசின் சட்ட திருத்த நடவடிக்கைகள் இதற்கு நேர்மாறாக உள்ளது. சட்டங்களை இந்தியில் பெயர் மாற்றினால் அது தமிழகத்தில் உள்ள வழக்கறிஞர் களுக்கு சிக்கலாக இருக்கும். மேலும், இந்த சட்ட திருத்தங்கள் பொதுமக்களும் கடும் சிரமத்தை ஏற்படுத்தும். ஜெ.ஏ.ஏ.சி அமைப்பு ஏற்கனவே அறிவித்துள்ளபடி 15 ஆம் தேதி கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி யில் இருந்து விலகி சென்னை யில் நடைபெற உள்ள பேரணியில் பங்கேற்க உள்ளனர். வழக்கறிஞர் களின் போராட்டத்திற்கு ஒன்றிய அரசு செவி சாய்க்காவிட்டால் தொடர் போராட்டங்களை முன் னெடுக்க தயாராக உள்ளோம் என் றார்.