தருமபுரி, ஏப்.4- பொருளாதாரத்தில் மிகவும் பின்தங் கியுள்ள தருமபுரி மாவட்டத்தை, வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல் வேன் என தருமபுரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளார் ஆ.மணி வாக்குறுதி அளித்துள்ளார். தருமபுரி மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியி டும் திமுக வேட்பாளர் ஆ.மணி, பாப் பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட கிராமங்களில் தீவிர வாக்குசே கரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசுகையில், தருமபுரி மாவட்டம் மிகவும் பின்தங்கியுள்ள வறட்சி மாவட்டமாகும். கடந்த 3 ஆண் டுகால திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை தமிழ்க அரசு நிறைவேற் றியுள்ளது. இதனால் தருமபுரி மக்க ளவை தொகுதி வேட்பாளராகிய எனக்கு மக்களிடையே அமோக வர வேற்புள்ளது. நான் வெற்றி பெற்றால் ஒன்றிய அரசின் திட்டங்களை மாவட்ட வளர்ச்சிக்கு கொண்டு வருவேன். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஆண்டுக்கு 150 நாட் கள் வேலை, தினக்கூலியாக ரூ.400 வழங்கப்படும். சமையல் எரிவாயு ரூ. 500க்கு கிடைக்கவும், தருமபுரியில் சிப் காட் பணிகளை துவங்கவும் நடவ டிக்கை எடுப்பேன். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தவும், மாவட்டத்தை பொருளாதார ரீதியாக மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். திமுக அரசால் ஏற்கனவே ஒகேனக்கல் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இர ண்டாம் கட்ட ஒகேனக்கல் குடிநீர் கிடைக்க ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவும், விவசாய கடனை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க இந்தியா கூட்டணி வேட்பாளராகிய எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும், என்றார். இந்நிகழ்வில் திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் சி.பழனியப்பன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் சக்தி வேல், மாவட்ட அவைத்தலைவர் மனோ கரன், இளைஞரணி மாவட்ட அமைப்பா ளர் சிவகுரு, மகளிரணி அமைப்பா ளர் கவிதா மோகன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.மாரிமுத்து, ஒன்றியச் செயலா ளர் என்.கந்தசாமி, விசிக பொறுப்பா ளர் ராஜா (எ) மண்ணன், ஒன்றியச் செய லாளர் குமரன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, ஏமக் குட்டியூரில் துவங்கி முக்கல்நாய்கன் பட்டி, செட்டிக்கரை, குரும்பட்டி, சோலைகொட்டாய், நடுஅள்ளி உள் ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் நடைபெற்றது.