districts

img

தலைவர்களின் சிலைகளுக்கு இந்தியா கூட்டணி மாலை அணிவித்து மரியாதை:

திருப்பூர், மார்ச் 25- இந்திய கூட்டணி கட்சியினர் திங்களன்று திருப்பூரில் தலைவர்களின் சிலைகளுக்கு  மாலை அணிவித்து மரியாதை செய்தனர். திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளராகப் போட்டியிடும் கே.சுப்பராயன் திருப்பூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும்,  மாவட்ட ஆட்சியருமான த.கிறிஸ்துராஜிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இதில்,  மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திமுக  திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளரும் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான  க.செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ்,  இந்திய தேசிய காங்கிரஸ் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் ஆர்.கிருஷ்ணன் ஆகியோர்  உடன் இருந்தனர். முன்னதாக தியாகி திருப்பூர் குமரன், பெரியார், அண்ணா, மகாத்மா காந்தி, அம்பேத் கர் ஆகியோரது சிலைகளுக்கு இந்தியா கூட்டணி கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை  செய்தனர்.